September 24, 2023

Revising Committee யிலும் ‘மெரினா புரட்சி’ படத்துக்கு தடை..!

Revising Committee யிலும் ‘மெரினா புரட்சி’ படத்துக்கு  தடை..!
‘மெரினா புரட்சி’ படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கைக் குழு மீண்டும் தடை..!
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மறைந்திருக்கும் உண்மைகளைப் பேசும் M.S. ராஜ் இயக்கத்தில் உருவான மெரினா புரட்சி படத்தைப் பார்த்த Censor Board Examination Committee எந்த காரணமும் சொல்லாமல் படத்தை Revising Committee க்கு அனுப்பினர்.
 
தற்போது படத்தை பார்த்த நடிகை கவுதமி தலைமையிலான Revising Committee குழு எந்த காரணமும் சொல்லாமல் மீண்டும் தடை விதித்துள்ளனர்.
 
Indian Cinematograph Act 1983 விதியின்படி Revising Committee மறுப்பு தெரிவித்தால் FCAT எனப்படும் டெல்லி டிரிப்யூனல் சென்று தணிக்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது வழக்கமான நடைமுறை. ஆனால் மெரினா புரட்சி படத்திற்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு 2nd Revising Committee க்கு படம் அனுப்பப்பட்டிருக்கிறது.
 
காரணமின்றி நிராகரிப்பதும் காலதாமதம் செய்வதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட விலங்குகள் நல அமைப்பின் கடிதம் தான் இந்த தடைக்கு காரணமாக இருக்குமோ எனும் ஐயம் எழுகிறது.
 
தமிழர்களின் பெருமை மிகு அடையாளமான ஜல்லிக்கட்டு போராட்டத்தை உரத்த குரலில் சொல்லும் மெரினா புரட்சி படத்தை  முடக்கும் அனைத்து சதிகளையும் முறியடிக்க நாச்சியாள் பிலிம்ஸ்  குழுவினர் உறுதியுடன் இருக்கிறோம்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *