Saregama Launches Carvaan Tamil and Carvaan Mini – M.S. Subbulakshmi
சரிகம அறிமுகம் செய்யும் கர்வான் தமிழ் மற்றும் கர்வான் மினி – எம்.எஸ்.சுப்புலஷ்மி
செய்தி வெளியீடு:
18 டிசம்பர் 2017: இந்தியாவின் மிகப்பழமையான மிய10சிக் லேபிளாகவும் மற்றும் மிக இளமையான மூவி ஸ்டூடியோவாகவும் திகழும் சரிகம, தென்னிந்திய இசையின் மிகப்பெரிய வழங்குபட்டியலைக் கொண்டுள்ளது குறிப்பிட த்தக்கதாகும். பிரபலமான திரைப்பட இசை, இன்ஸ்ட்ரூமென்டல், பக்தி அல்லது கர்நாடக இசை என, இந்நிறுவனம் தொழில்துறையின் மிகச்சிறந்த பல்வேறு படைப்புகளுக்கான உரிமைகளைக் கொண்டுள்ளது. கர்வான் வெற்றியின் அடிப்படையில், இந்நிறுவனம் தென்னிந்திய சந்தைக்காக, கர்வான் தமிழ் மற்றும் கர்வான் மினி – எம்.எஸ்.சுப்புலஷ்மி ஆகிய இரண்டு வகையினங்களை அறிமுகம் செய்துள்ளது.
கர்வான் தமிழ் 5000 முன்னமே லோடு செய்யப்பட்ட பாடல்களைக் கொண்டுள்ளது – இதில் பல்வேறு தமிழ்த்திரைப்படப் பாடல்கள், பக்திப் பாடல் மற்றும் சில மிகப்பிரபலமான பாலிவுட் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பல்வேறு அடித்தளங்களில் பயணர்களின் இசை பயன்பாடு குறித்த பல பில்லியன் பதிவுகள் மீது மேற்கொள்ளப்பட்ட தரவு பகுப்பாய்வுகளின் படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இப்பாடல்கள் பாடகர்கள். கவிஞர்கள், இசையமைப்பாளர்கள் போன்ற வகைகளில் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகையையும் ஒரு ஜாக்-ட்யல் சுழற்சியின் வழியாக தேர்ந்தெடுக்கலாம்.
எனவே, வெறும் ஒரு நாபை திருப்புவதன் வழியாக, எம்.எஸ்.சுப்புலஷ்மி கிளாசிக்ஸ்களிலிருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஹிட்ஸ் – க்கு, காலத்தால் அழியாக காதல் பாடல்களுக்கு அல்லது மிகப்பிரபலமான பக்திப் பாடல்களை – அசல் பதிப்புகளில்ää தொடர்ச்சியாக எத்தகைய விளம்பர இடைவேளைகளும் இன்றி கேட்டு மகிழலாம். கர்வான் தமிழ் மிய10சிக் பதிப்பில், டாக்டர். எம்.பாலமுரளிகிருஷ்ணா, என்.ரமணி மற்றும் ஈ.காயத்ரி போன்ற கர்நாடன இசை வல்லுனர்களின் வாய்ப்பாட்டு மற்றும் வாத்திய இசைகளும் உட்பட்டு ள்ளன. இவை மாத்திரம் இல்லை.
கர்வான் தமிழில், எஃப்எம் வானொலி, தனிநபர் விருப்ப பாடல்களை யுஎஸ்பி டிரைவ் அல்லது இச்சாதனத்தின் புளுடூத் இணைப்பு வழியாக மொபைலிலிருந்தும் கேட்டு மகிழலாம். 5 மணி நேரங்கள் வரை நீடிக்கத்தக்கதொரு ரீசார்ஜபிள் பேட்டரியில் இது செயல்படுகிறது. இவ்வனைத்து வசதிகளுக்கும் கூடுதலாகää 1-ஆண்டிற்கு டோர்ஸ்டெப் வாரண்டி ஆதரவை இந்தியா முழுவதும் வழங்கும் ஒரு அனைத்திந்திய சேவை வலையமைப்பின் பின்புலத்துடன் கிடைக்கப்பெறுவது சரிகம கர்வான் தமிழை உங்களது.
அன்புக்குரியவர்களுக்கு இந்த விடுமுறை காலகட்டத்தில் வழங்குவதற்கான சிறந்த பரிசாக மாற்றுகிறது.கர்வான்மினி – எம்.எஸ்.சுப்புலஷ்மி 251 முன்பே லோடு செய்யப்பட்ட,இசைமேதையின் மிகச்சிறந்த பாடல்களைக் கொண்டுள்ளது. இந்த கவர்ச்சிகரமான மிய10சிக் பிளேயர் நவீன ஆடியோ தரத்தை வழங்குவதுடன்ää யுருஓ இன்புட்,புளுடூத் 4.1 மற்றும் யுஎஸ்பி வசதிகளைக் கொண்டுள்ளது மற்றும் இதில் இடையில் ரீசார்ஜ் செய்யாமல் 5 மணி நேரங்கள் வரை கேட்கலாம்.சரிகம இந்தியா மேலாண்மை இயக்குனர் திரு.விக்ரம் மெஹ்ரா அவர்கள்,“சரிகா ஒரு பிரம்மாண்டமான ஹிந்தி இசை உள்ளடக்கங்கள் மட்டுமின்றி, ஈடுஇணையற்ற தமிழ் இசை தொகுப்புகளையும் கொண்டுள்ளது.
எனவே,தென்னிந்தியாவிலுள்ள எங்களது தமிழ் வாடிக்கையாளர்களுக்காக கர்வான் தமிழ் பதிப்பு மற்றும் கர்வான் மினி – எம்.எஸ்.சுப்புலஷ்மி ஆகியவற்றை அறிமுகம் செய்வதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். கர்வானுக்காக நாங்கள் திட்டமிட்டுள்ள பல்வேறு பிராந்திய வழங்குதல்களில் இது முதலாவதாகும் மற்றும் கர்வான் தமிழ் மற்றும் கர்வான் மினி – எம்எஸ் சுப்புலஷ்மி வழியாக சந்தையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று உறுதியாக நம்புகிறோம்” என்று கூறினார்.
இச்சாதனங்கள் குரோமா மற்றும் saregama.com
மற்றும் amazon.com
போன்ற ஆன்லைன் ஸ்டோர்களிலிருந்து வாங்கப்படலாம். கார்வான் தமிழ் ரூ.5990 விலையிலும் மற்றும் கார்வான் மினி ரூ.2290 விலையிலும் 7 டிசம்பர் முதல் கிடைக்கப்பெறும்.
சரிகம இந்தியா லிமிடெட் குறித்து:
இதற்கு முன்பாக கிராமஃபோன் கம்பெனி ஆஃப் இந்தியா என்று அழைக்கப்பட்ட சரிகம,இந்தியா மற்றும் உலகளாவிய அளவில் மிகப்பெரிய மிய10சிக் ஆர்கிவ்களைக் இந்நிறுவனம் கொண்டுள்ளது. ஏறக்குறைய இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள 50 சதவிகித்திற்கும் மேற்பட்ட இசை கோர்புகளை சொந்தமாகக் கொண்டுள்ள சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம், தெற்காசிய இசையின் ப்ரீமியர் சேருமிடமாகவும் மற்றும் பிராந்திய இசை பாரம்பரியத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. தற்போது சரிகம பிற பொழுதுபோக்கு பிரிவுகளில் கால்பதித்துள்ளது. இதில் பப்ளிஷிங், தொலைகாட்சி மென்பொருள் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கங்கள் உட்பட்டுள்ளன. கொல்கத்தாவின் தம்தம் பகுதியில் இந்நிறுவனம் ஸ்டூடியோ ஒன்றைக் கொண்டுள்ளதன் வழியாக,நாட்டின் மிகச்சிறந்த முழுமையான பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.