SRM மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் புதிய புறநோயாளிகள் விரிவு, SRM கல்வி குழுமங்களின் நிறுவன வேந்தர் மாண்பமை டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் அவர்களால் இன்று தொடங்கிவைக்கப்பட்டது. இந்தத் தொடக்கவிழா நிகழ்ச்சியில் அவர் உரையாற்றும்போது,
‘‘பொதுமக்களின் நீண்ட நாள் தேவை, அவர்களின் ஒத்துழைப்புடன் இன்று நிறைவேறியுள்ளது என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், மக்களின் நலன்கள், அவர்களின் வசதி மற்றும் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து SRM தொடர்ந்து பணியாற்றி வருகிறது. அதற்கு ஒரு சான்றுதான் இந்தப் புறநோயாளிகள் பிரிவின் புதிய கிளையாகும். அடிப்படை மருத்துவ வசதிகளுடன் கூடிய இந்தப் பிரிவு, நோயாளிகளின் நோய் நாடி உதவும் என்பதுடன் தேவைப்பட்டால் மேற்கொண்டு அவர்களுக்குச் செய்யவேண்டிய மருத்துவம் பற்றியும் வழிகாட்டும்.
இந்தப் புறநோயாளிகள் கிளையில் நிறைய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமருந்தின் சிறப்பு புறநோயர் பிரிவுகள், பொது அறுவை மருத்துவம், குழந்தை நோயியல், பல் மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் முதலான பல பிரிவுகளிலும் நிறைய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த அவசர மருத்துவப் பிரிவு வாரத்தின் 7 நாள்களிலும் 24 மணி நேரமும் இயங்கும்.
இந்த மருத்துவமனையின் பல நன்மைகளில் ஒன்று. இது பொத்தேரி தொடர்வண்டி நிலையத்தின் எதிரிலேயே உள்ளது என்பதாகும். மேலும் பேருந்து நிறுத்தம் பக்கத்திலேயே உள்ளது. எந்த நேரமும் கிடைக்கக்கூடிய வகையில் ஆம்புலன்ஸ் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடிப்படைத் தேவைகள் மட்டுமின்றி, பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் மருத்துவக் கலந்தாய்வுக்கும் மருத்துவம் அளிக்கவும் மாலை 4 மணி மதல் இரவு 10 மணி வரை இங்கு இருப்பார்கள்.
மாண்பமை வேந்தர் அவர்கள் மேலும் கூறுகையில் நோயாளிகளைப் பரிவுடன் கவனிக்கும் பணியாளர்களும் நிறைய மருத்துவ வசதிகளும் இங்கு இருப்பதால் நோயாளிகள் தங்கள் வீட்டிலிருந்தபடியே மருத்துவம் எடுத்துக்கொள்வதுபோல் உணர்வார்கள். மேலும் நல்ல தூய்மையான விழிப்பான சுற்றுப்புறச் சூழலால் அவர்கள் விரைவில் குணமடைவார்கள். SRM 30 ஆண்டுகளுக்கு மேலாக, மக்கள் பணியாற்றுவதால் இந்த மருத்துவமனையின் தரம் வேறு ஒன்றுடன் ஒப்பிடமுடியாதபடி SRM உடன்தான் ஒப்பிட முடியும். மக்களின் மனமே SRMன் மனம் என்றும் தெரிவித்தார்.