SRM INSTITUTE OF SCIENCE AND TECHNOLOGY
TAMIZHPERAYAM &
PARIVENDHAR STUDENT TAMIZH ASSOCIATION
WORLD POETRY DAY-2018
SRM Group of Institution was organized the function to celebrate World Poetry Day on 21st March 2018. The function was headed by the Pro- Vice Chancellor & Professor. Ganesan. The Director of SRM Group of Institutions Thiru.J. Chandrakumar I.A.S(retired)was addressed the program. The Secretary of Tamizh Perayam Prof.Karu. Nagarajan was delivered the Welcome Address. Kalaimamai Kavingar Aervadi S. Radhakrishnan was inaugurated the students program called Kavimalargal and given the Benediction. The founder of SRM Group of Institutions Vendhar Dr. R. Parivendhar was released the VendharNeri special Magazine and delivered a special speech. Kalaimamani Prof. Seyon was received the first copy of the magazine and delivered a speech. The program was concluded with A Poem of Valedictory read by student Convenor R. Arunachalam.
எஸ். ஆர். எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
தமிழ்ப்பேராயம் மற்றும் பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்
நடத்தும்
உலகக் கவிதைகள் தினம் – 2018
உலகக் கவிதைகள் தினத்தை முன்னிட்டு 21/03/2018 அன்று நடைபெற்ற விழாவில் எஸ். ஆர். எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இணை துணைவேந்தர் முனைவர் தி.பொ. கணேசன் தலைமை தாங்கினார். எஸ். ஆர். எம். குழும இயக்குநர் திரு ஜே. சந்திரகுமார் இ.ஆ.பா (ஓய்வு) முன்னிலை வகித்தார். தமிழ்ப்பேராயத்தின் செயலர் முனைவர் கரு. நாகராசன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மாணவர்கள் பங்கேற்கும் கவிமலர்கள் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து கலைமாமணி கவிஞர் ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில் எஸ். ஆர். எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் நிறுவன வேந்தர் டாக்டர் தா. இரா.பாரிவேந்தர் ஐயா வேந்தர்நெறி சிறப்பிதழை வெளியிட்டு விழாப் பேருரை ஆற்றினார். இதழின் முதல்படியைப் பெற்று கலைமாமணி முனைவர் சேயோன் சிறப்புரை ஆற்றினார். பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்ற மாணவ அமைப்பாளர் செல்வன் இரா. அருணாச்சலம் நன்றிக் கவிதை வாசித்தார். வடபழனி வளாக மாணவி செல்வி வி.ஸ்ரீமதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிட விழா இனிதே நிறைவடைந்தது.