STUDIO GREEN சார்பில் K.E. ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும் படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார்

இப்படத்தை ஹர ஹர மஹா தேவகி ,மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களை இயக்கியசன்தோஷ் P ஜெயக்குமார் இயக்குகிறார் .இப்படத்தின் பூஜை இன்று காலை (29-11- 2017) இனிதே நடைபெற்றது. இப்படத்தில் ஆர்யாவுக்குஜோடியாக “வனமகன்” சாயிஸா நடிக்கிறார். மேலும் பாலமுரளி பாலு இசையமைக்க, பல்லு அவர்கள்ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா G.K படத்தொகுப்பை கவனிக்க, கோபி ஆனந்த் கலை இயக்குத்துக்குபொறுப்பேற்றிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது.