



உடக நண்பர்களுக்கு வணக்கம்!
எனது படம் ‘மனுசனா நீ’ கடந்த வாரம் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
இணையத்தில் திருட்டுத்தனமாக வெளிவரக் கூடாது என்பதற்காக வெளிநாட்டு உரிமை, மற்ற மாநிலங்களில் திரையிட உரிமை என்று எதுவும் கொடுக்காமல் தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் மட்டும் வெளியிட்டேன்.ஆனாலும் தியேட்டரில் கேமரா வைத்து எடுத்து நெட்டில் திருட்டுத்தனமாக வலையேற்றி விட்டனர்.
ஃபாரன்சிக் வாட்டர்மார்க் கொண்டு எந்தத் தியேட்டர், எத்தனை மணிக்கு திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் வெகு விரைவில் கிடைக்கும்.
கிடைத்தவுடன் அந்தத் தியேட்டர்மேல் போலீஸில் புகார் கொடுக்கவும், வழக்குத் தொடுக்கவும், முதல் அமைச்சர் மற்றும் முக்கிய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் என்று அனைத்து இடங்களிலும் மனு அளிக்க உள்ளேன்.
இந்த திருட்டு தனமான டிஜிட்டல் வெளியீட்டினால் ஆண்டிற்கு 500 முதல் 600 கோடி வரை தமிழ் சினிமாவிற்கு இழப்பு ஏற்படுகிறது.
இந்த எங்கள் நடவடிக்கைக்கு ஊடக நண்பர்கள் ஒத்துழைத்து செய்தியை அனைத்து மட்டங்களுக்கும் கொண்டு சென்று நீதி கிடைக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி!
கஸாலி
தயாரிப்பாளர், இயக்குநர்