O Press Release

திகில் படங்கள் மற்றும் சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் படங்கள் எல்லா வெள்ளிக்கிழமைகளில்  திரையரங்குகளில் தவறாமல் ரிலீஸ் ஆகி வருகின்றன. ஒரு கட்டத்தில் ரசிகர்கள் இந்த வகை படங்களை பார்த்து சோர்ந்து விட்டார்கள் என்றே கூறலாம். ஆனால், இந்த வகை படங்களை ரசிக்கும் தீவிர ரசிகர்கள் எப்பொழுதும் ‘மீண்டும் உயிர் பெறச்செய்யும் தருணத்தின்’ தேவையை எப்போதும் உணர்ந்திருக்கிறார்கள். நமக்குள் ஒரு விதமான அதிர்ச்சியுடனும் மயக்கத்தோடும் அனுபவமற்ற அனுபவங்களை வழங்குவதன் மூலம் இந்த வகை படங்கள் மறுமதிப்பீடு செய்யப்படுகிறது. திரைப்பட இயக்குனர் பிரவீன் பிக் காட், சொல்லும் ஒரு விளக்கப்படம் இது. இது ஒரு மிகைப்படுத்திய உச்சரிப்பு அல்ல, ஆனால் தயாரிப்பாளர் அஜய் பணிக்கர் அவர்கள் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள்.
 
” எங்கள் நிறுவனத்தின் இரண்டாவது படம் இது. இது மிகச்சிறந்த படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். 50க்கும் மேற்பட்ட கதைகளை கேட்க வேண்டியிருந்தது. இறுதியாக, ‘ஓ’ படத்தின் கதையில் படத்துக்கு தேவையான அத்தனை அம்சங்களும் இருப்பதாக உணர்ந்தோம். மேலும், அது நகைச்சுவை இல்லாமல் மிகச்சரியான ஒரு திகில்-த்ரில்லர் படமாக இருக்க போகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு பார்வையாளரின் வாழ்க்கையை இந்த படம் பிரதிபலிக்கும், அவர்கள் படத்தின் திரைக்கதைக்கு நெருக்கமாக தங்களை தொடர்புபடுத்திக் கொள்வார்கள். ப்ரவீன் ஸ்கிரிப்ட்டை விவரிக்கும் போது, ​கதையை கேட்ட மாதிரி இல்லாமல், ஒரு படத்தை பார்த்த அனுபவமாக இருந்தது. நிறைய மெய் சிலிர்க்க வைக்கும் விஷயங்கள் படத்தில் இருந்தன என்கிறார் தயாரிப்பாளர் அஜய் பணிக்கர்.
 
அஞ்சலியைப் பற்றி அவர் கூறும்போது, “அவரது முழுமையான அர்ப்பணிப்பு, அழகிய தோற்றம் மற்றும் பக்கத்து வீட்டு பெண் போன்ற கதாபாத்திரத்திற்கு கச்சிததமாக பொருந்தும் திறன் இந்த கதாபாத்திரத்திற்கும் ஸ்கிரிப்ட்டிற்கும் பொருத்தமாக அமைந்தது” என்றார்.
 
தயாரிப்பாளர் அஜய் பணிக்கரால் அரோல் கொரோலியின் இசை பங்களிப்பை பற்றி கூறாமல் இருக்க முடியாது. அவர் பற்றி கூறும்போது, “ஓ படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன, மூன்றுமே திரைக்கதையோடு இணைந்த பாடல்கள். பின்னணி இசை வலுவான தாக்கத்தை கோருவதால் இந்த படத்துக்கு அரோல் கோரேலியின் இசை இருந்தால் தான் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தோம், அதனால் அவரை ஒப்பந்தம் செய்து விட்டோம்” என்றார்.
 
மேலும் அஜய் கூறும்போது, “‘ஓ’ தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் ஒரு இருமொழி படம். படத்தின் தலைப்பு மற்றும் லோகோவிற்கு கிடைத்த  வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ‘O’ என்ற தலைப்புக்கு பின்னால் நிறைய ஆச்சரியங்கள் மறைந்துள்ளன. விரைவில் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு மற்றும் first look” வரும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *