காசி, ராமேஸ்வரம், திலதர்ப்பனபுரி மற்றும் கேரளா
வேத நூல்கள் பரிந்துரைக்கும் 4 சிறப்பு வாய்ந்த தீர்த்தங்களில் ஒரு வருட தர்ப்பணநிகழ்ச்சி
நமது வாழ்வில் நாம் சந்திக்கும் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் தர்ப்பணம் இன்றியமையாத சடங்காகும். இது பித்ருக்களை திருப்திப்படுத்தி அவர்களுக்கு நிவாரணம் அளிக்கவும் பித்ரு தோஷத்தால் நமது குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளைக் களையவும் நாம் செய்யக் கூடிய, செய்ய வேண்டிய மிகப் பெரிய செயலாகும். ஆஸ்ட்ரோவேட், வேத நூல்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ள முன்னோர்களுக்கான சடங்குகள் செய்வதற்கான மேலே கூறப்பட்டுள்ள மிக சக்தி வாய்ந்த நான்கு தீர்த்தங்களில் ஒரு வருட தர்ப்பண நிகழ்ச்சி ஒன்றை உருவாக்கியுள்ளது. முன்னோர் காரியங்கள் செய்வதற்கு உகந்த நாட்களில் செய்யப்படும் 44தர்ப்பணங்கள் மற்றும் 36 துணை சடங்குகள் அடங்கிய ஒரு வருட தர்ப்பண நிகழ்ச்சியின் மூலம் பித்ரு தோஷம் நீங்கப்பெற்று அவர்களின் ஆசி மூலம் வாழ்வில் சகல நலன்களையும் பெறலாம்.
காசி (கயை) – முக்தி தரும் ஸ்தலம் என்று போற்றப்படும் காசி முன்னோர்களுக்கு தர்ப்பணம்(நீத்தார் கடன்) செய்வதற்கு மிக முக்கியமான இடங்களுள் ஒன்று.
ராமேஸ்வரம் – ராமரும் அவரது மனைவி சீதாவும், மற்றும் சகோதரன் லட்சுமணனும் சிவலிங்கத்தை உருவாக்கி வழிபாடு செய்த இந்த புனிதமான தீர்த்தத்தில் தர்ப்பணம் செய்வதன் மூலம் மூதாதையர்களின் ஆன்மாக்களுக்கான பாதையில் இருக்கும் தடைகள் நீங்கி அவர்கள் முக்தி பெற உதவுகின்றது.
திலதர்ப்பணபுரி –ராமன் தனது தந்தையாகிய தசரதருக்கு இங்கு தர்ப்பணம் செய்தார். எனவே இந்த இடம் முக்தி ஷேத்திரம் என்று (முன்னோர்கள் ஆன்மா முக்தியடையும் இடம்) கூறப்படுகின்றது.
கேரளா கோவில் – இந்த குறிப்பிட்ட கேரளா கோவிலருகில் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாகிய பரசுராமன் தன்னால் கொல்லப்பட்ட க்ஷத்ரியர்களுக்குதர்ப்பணங்களை செய்த காரணத்தாலும், இந்த கோவில் தெற்கு கங்கை என்றழைக்கப்படும் நதியின் கரையில் அமைந்துள்ளதால் இங்கு தர்ப்பணம் நிகழ்த்துவதால் கூடுதல் புனிதத்தன்மை கிடைகின்றது.
தர்ப்பணம் செய்வதற்கு ஒரு வருடத்தில் காணப்படும் உகந்த நாட்களைப் பற்றி காண்போமா?
- தமிழ் மாத பிறப்பு: 12 நாட்கள்.
- அமாவாசை: 12 நாட்கள்.
- கிரகணம்: 2 நாட்கள்.(சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம்)
- விஷ்ணுபதி: 4 நாட்கள் (ஸ்ரீ மகாவிஷ்ணு முன்னோர்களுக்கு முக்தி அருளும் நாட்கள்).
- மகாளயபட்சம் 15 நாட்கள்.
தர்ப்பணங்களுடன், அன்னதானம், பசுக்களுக்கு உணவளித்தல் மற்றும் கோகர்ண பாகவத சப்தாஹம் படித்தல் போன்ற 36 உப சடங்குகளும் நடைபெறும்.
- 12 தடவை அன்னதானம் – அமாவாசை அன்று 11 நபர்களுக்கு உணவளித்தல் (வருடத்தில் 12 நாட்கள்)
- 12 முறை – அமாவாசை அன்று பசுக்களுக்கு அகத்திக்கீரை அளித்தல் (வருடத்தில் 12 நாட்கள்)
12 முறை கோகர்ண பாகவத சப்தாஹம் அமாவாசை நாட்களில் படித்தல் –( வருடத்தில் 12 நாட்கள்) புனித நூல்களின் படி கோகர்ண பாகவத சப்தாஹம் படிப்பதன் மூலம் மிகக் கொடிய பாவம் செய்த ஆன்மாக்கள் கூட முக்தி அடைகின்றது.
பித்ருக்களை திருப்தி படுத்தி அவர்களின் ஆசி பெற ஆஸ்ட்ரோவேட் நடத்தும் தர்ப்பண நிகழ்வில் பங்கு கொண்டு பயன் பெற உங்களை அன்போடு அழைக்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு:www.astroved.comமற்றும் +91 9500096081, +91 9003111077