இலங்கையின் தேசிய விருதை வென்ற ‘ஓவியா’ பட பாடல்!

இலங்கையின் தேசிய விருதை வென்ற ‘ஓவியா’ பட பாடல்!

‘ஓவியா’ பட பாடலுக்கு தேசிய விருது! 

‘ஓவியா’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘அள்ளிக்கொள்ளவா’ எனும் பாடலை இசையமைத்ததற்காக   இலங்கை அரசின் ‘சிறந்த இசையமைப்பாளர்’ எனும் தேசிய விருதை இசையமைப்பாளர் சிவா பத்மஜன் பெற்றார்.

 

இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகிவரும் படம் ‘ஓவியா’. புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கிவரும் இந்தப்படத்திற்கு சிவா பத்மஜன்   இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். விஜய் டிவி புகழ் அனீஸ் ரஹ்மான் நடனம் அமைக்கிறார்.

 

காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக இலங்கையை சேர்ந்த நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் ‘ ஓவியா’வாக நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘அள்ளிக்கொள்ளவா’ எனும் பாடலுக்காக படத்தின் இசையமைப்பாளரான சிவாபத்மஜன் அவர்களுக்கு இந்த வருடத்திற்கான ‘சிறந்த இசையமைப்பாளர்’ விருது  இலங்கை அரசிடம் இருந்து கிடைத்துள்ளது. விஜய் டிவியின் சூப்பர் சிங்கரில் டைட்டில் வின்னரான ஆனந்த் அரவிந்தக்ஷன் இந்த பாடலைபாடியுள்ளார்.

ஜூன் 22 இல் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், இலங்கையின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் கலைத்துறை அமைச்சர் எஸ்.பி.நவய்நெ (S.B.Nawwine) அவர்கள்  ‘சிறந்த இசையமைப்பாளர்’ விருதை இசையமைப்பாளர் சிவா பத்மஜன் அவர்களுக்கு வழங்கினார்.

இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *