Fox Star Studios & Abundantia Entertainment collaborate for the biopic of ace badminton player and coach Pullela Gopichand!
Living up to a successful track record of delivering blockbusters with outstanding stories like Neerja, Jolly LLB (Part 1 & 2) and M S Dhoni : The Untold Story, Fox Star Studios in collaboration with Abundantia Entertainment, the name behind critically and commercially acclaimed films like Baby and Airlift, is all set to present the biopic of ace badminton player, chief national coach of the Indian Badminton team and Padma Shri awardee — Pullela Gopichand. The film, a bilingual biopic in Hindi & Telugu will chronicle the exciting journey of Pullela Gopichand, on and off the court. The scripting of the film is underway and the shoot will commence in mid-2018.
Born in 1973 in Andhra Pradesh, Gopichand whose first love was cricket during his growing-up years, rose to become one of the top badminton players in the country & won the prestigious All England Open Badminton Championships in 2001. After bringing in laurels to the country, Gopichand retired in 2003 & opened country’s premier badminton institution – Pullela Gopichand Badminton Academy in Hyderabad. The sports academy has produced few of the country’s leading players such as 2012 Olympic bronze medalist Saina Nehwal, 2016 Olympic silver medalist P V Sindhu & the Super Series record holder Srikanth Kidambi.
Commenting on the biopic, Pullela Gopichand, said, “Badminton is at an inflection point in our country and nothing delights me more than to see the rapidly growing interest for the sport, especially with the youth. I would be proud if by sharing my story as a film, we can encourage more and more people to pursue their dreams. I am excited with the developments on the film and look forward to Vikram and Fox Star taking this film to the masses.”
Vijay Singh, CEO, Fox Star Studios, says “It’s a proud moment for us to present the incredible story of Pullela Gopichand. It’s an inspirational story of a man who not only was an outstanding player but went onto coach the new generation of players and has changed the face of badminton sport and has taken it to its current heights . Fox Star Studios has a proud legacy of presenting real stories like Neerja and M S Dhoni and we are proud to associate with Gopichand and Vikram Malhotra.”
Vikram Malhotra, CEO, Abundantia Entertainment, said, “I am excited with the way this biopic on one of new India’s most-inspiring icons is taking shape. It is a huge responsibility for us to bring the Pullela Gopichand story to the big screen and to share this rare tale with audiences all over the world. I am also delighted to have Fox Star join in on this journey and together we are committed to give our best to tell Gopichand’s glorious tale of determination, grit, dedication and triumph. I also take this occasion to wish a very happy birthday to Gopi.”
பயோபிக் எனப்படும் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் அதிகம் வந்து கொண்டே தான் இருக்கின்றன. அந்த வகையில் பேட்மிண்டன் வீரரும், பேட்மிண்டன் பயிற்சியாளருமான புல்லெலா கோபிசந்த் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ஒரு சினிமா உருவாகிறது. ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் அபுண்டன்ஷியா எண்டர்டெயின்மெண்ட் இணைந்து இந்த படத்தை பெரும் பொருட்செலவில் உருவாக்குகிறார்கள்.
நீரஜா, ஜாலி எல்எல்பி 1 &2, எம்எஸ் தோனி தி அன்டோல்டு ஸ்டோரி என நல்ல கதைகளை தயாரித்து, பிளாக்பஸ்டர் வெற்றிகளை பெற்று வரும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், பேபி, ஏர்லிஃப்ட் போன்று வணிகரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சிறந்த படங்களை கொடுத்த அபுண்டன்ஷியா எண்டர்டெய்ன்மெண்ட் இணைந்து இந்திய பேட்மிண்டன் டீமின் பயிற்சியாளரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான புல்லேலா கோபிசந்த் அவர்களை பற்றிய பயோபிக் படத்தை தயாரிக்கிறார்கள். கோபிசந்தின் விளையாட்டு மற்றும் குடும்ப வாழ்க்கையை மிகவும் விறுவிறுப்பான திரைக்கதையோடு தெலுங்கு மற்றும் இந்தி என இரு மொழிகளில் எடுக்கிறார்கள். திரைக்கதை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. 2018ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும்.
1973ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் பிறந்த கோபிசந்த், வளரும் காலங்களில் கிரிக்கெட்டின் மீது தான் காதலாக இருந்தாராம். ஆனால் இந்தியாவின் சிறந்த பேட்மிண்டன் வீரராக மாறி, 2001 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பெருமைமிக்க ஒபன் பேட்மிண்டன் சாம்பியன் விருதை தட்டி வந்தார். இந்தியாவுக்கு பல பெருமைகளை தேடித்தந்த கோபிசந்த் 2003 ஆம் ஆண்டு பேட்மிண்டனில் இருந்து ஓய்வு பெற்று, ஐதராபாத்தில் புல்லேலா கோபிசந்த் பேட்மிண்டன் அகடமியை துவங்கினார். 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாய்னா நேவால், 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிவி சிந்து, சூப்பர் சீரீஸ் ரெக்கார்ட் செய்த ஸ்ரீகாந்த் கிடம்பி ஆகியோர் இந்த அகடமியில் கோபிசந்திடம் பயிற்சி பெற்றவர்கள் தான்.
பேட்மிண்டன் தற்போது இந்தியாவில் எல்லா மக்களிடமும் சென்று சேர்ந்திருப்பதும், குறிப்பாக இளைஞர்கள் இந்த விளையாட்டின் மீது ஆர்வம் காட்டுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது. என் வாழ்க்கை வரலாற்றை படமாக்குவதன் மூலம் பல்வேறு கனவுகளில் இருக்கும் பலரை ஊக்கப்படுத்த முடியும் என்பதில் பெருமை அடைகிறேன். இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நன்றாக நடந்து கொண்டு இருக்கின்றன, ஃபாக்ஸ் ஸ்டார் மற்றும் விக்ரம் அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன் என்றார் புல்லேலா கோபிசந்த்.
சிறந்த விளையாட்டு வீரராக மட்டுமல்லாமல் ஒரு பயிற்சியாளராகவும் மாறி பல அடுத்த தலைமுறை உருவாக்கி, பேட்மிண்டன் விளையாட்டுக்கு ஒரு புதிய அடையாளத்தை கொடுத்த புல்லேலா கோபிசந்தின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதில் பெருமை அடைகிறோம். நீரஜா, தோனி போன்ற உண்மைக்கதைகளை கொடுத்த சினிமாவாக கொடுத்த நாங்கள், கோபிசந்த் மற்றும் விக்ரம் மல்ஹோத்ராவுடன் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் ஃபாக்ஸ் ஸ்டார் சிஇஓ விஜய் சிங்.
புதிய இந்தியாவின் ஒரு முக்கிய அடையாளமாக இருக்கும் பேட்மிண்டன் கோபிசந்த் வரலாற்றை படமாக்குவது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. உலகம் முழுக்க இருக்கும் ரசிகர்களிடம் கோபிசந்தின் கதையையும், அவரின் பார்க்காத சில பக்கங்களையும் கொண்டு சேர்க்கும் பெரும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அதுவும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து இந்த பயணத்தை மேற்கொள்வதும், கோபிசந்தின் அர்ப்பணிப்பு, உறுதி, தன்னம்பிக்கை ஆகியவற்றை திரையில் காட்டுவதும் பெருமையாக கருதுகிறோம். இந்த நேரத்தில் கோபிசந்த்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அபுண்டன்ஷியா எண்டர்டெயின்மெண்ட் சிஇஓ விக்ரம் மல்ஹோத்ரா.