எஸ்ஆர்எம் தமிழ்ப்பேராயம் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரில் விருது வழங்கப்படும்

எஸ்ஆர்எம் தமிழ்ப்பேராயம் சார்பில் தமிழ் அறிஞர்களுக்கு விருது மற்றும் ரூ.15 லட்சம் ரொக்கபரிசு வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் எம்பி வழங்கினார் கவிஞர் வைரமுத்து பங்கேற்றார்


எஸ்ஆர்எம் தமிழ் பேராயம் சார்பில் நடைபெற்ற தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில் 10 பேருக்கு ரூ.15 லட்சம் பரிசு தொகை மற்றும் விருதுகளை எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்களில் நிறுவனர் வேந்தர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் வழங்கி பேசுகையில் உலக வாழ் தமிழர்களின் உறவு மையம் என்ற அமைப்பு உருவாக்க உள்ளதாகவம்  முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரில் விருது வழங்கப்படும் என்றார். இதில் கவிப்பேரரசு வைரமுத்து விருது பெற்றவர்களை வாழ்த்தி பேசினார்.

SRM அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவன வேந்தரும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி எம்பியுமான டாக்டர் டி.ஆர். பாரிவேந்தர் தமிழ் மொழியின் மீது உள்ள பற்றின் காரணமாக ஏற்கனவே உள்ள4 தமிச்சங்கங்களின் வரிசையில் ஐந்தாவது தமிழ்சங்கமாக தமிழ்ப்பேராயம் என்ற அமைப்பை நிறுவினார்.இந்தியாவில் அனைத்து மொழிகளின் மேம்பாட்டிற்காக சாகதிய  அகாடமி செயல்பட்டு வருவது போல தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு இந்த தமிழ்ப்பேராயம் அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் மூலமாக தமிழ் அறிஞர்கள் புலவர்கள் கவிஞர்கள் எழுத்தாளர்களுக்கு 2012 முதல் விருது மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது.

 எஸ்ஆர்எம்  தமிழ்ப்பேராயம் சார்பில் 7 வது ஆண்டாக தமிழ் பேராய விருதுகள் வழங்கும் விழா எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் டி.பி.கணேசன் அரங்கில் நடைபெற்றது. சென்னை கிருஷ்ணாலயா நாட்டிய குழுவினரின் நாட்டிய நிகழ்வுடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை தமிழ்ப்பேராயம் தலைரும் இணை துணைவேந்தருமான முனைவர் இர.பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.

நிகழ்ச்சிக்கு எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்கள் நிறுவன வேந்தரும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி எம்பியுமான டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் தலைமை வகித்து தமிழ்ப்பேராயம் சார்பில் நீலா நதி நூலாசிரியர் கவிபித்தனுக்கு புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, இணைவெளி ஆசிரியர் மரபின் மைந்தன் முத்தையாவிற்கு பாரதியின் கவிதை விருது, மந்திர மரமும் மாய உலகங்களும் ஆசிரியர் முனைவர் இரா.கற்பகம்,பேராசிரியர் முனைவர் க.சுந்தரமூர்த்திக்கு பாரிவேந்தர் பைந்தமிழ் விருது உள்ளிட்ட 10 பேருக்கு விருது மற்றும் ரூ.15 லட்சம் பரிசு தொகை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது

எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் பொறியியல் மருத்துவம் மேலாண்மை கல்வி பணிகள் வழங்குவது என்றில்லாமல் தமிழ் உணர்வு பற்றுள்ளவர்களை தமிழை சுவாசிப்பவர்களை கெளரவிக்கும் வகையில் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.7 வது ஆண்டாக விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடத்தப்படுகிறது. அதோடு வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள் பட்டம் பெறும் வகையில் கல்வி பணியும் செய்யப்படுகிறது.

தமிழ்ப்பேராய பணிகள் மட்டுமில்லாமல் உலக அளவில் உலக வாழ் தமிழர்கள் உறவு மையம் ஒன்று தொடங்கப்பட உள்ளது அதற்கு இந்த விழாவிற்கு சிறப்பு சேர்க்க வந்துள்ள கவிப்பேரரசு பத்மபூஷன் வைரமுத்து தலைமை ஏற்க வேண்டும் என்றார்.விரைவில் இந்த நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளதுஅதில் வைரமுத்துவிற்கு 
மதிப்புறு புலவர் என்ற பட்டம் வழங்க உள்ளோம் அதனை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்று விருது பெற்ற தமிழ் அறிஞ்சர்களை பாராட்டி பேசுகையில் 

தமிழ்க்காக பாடுபட்டு வரும் தமிழ் அறிஞ்சர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர் பட்டாளம் பங்கேற்று இருப்பது பாராட்டுக்குரியது .நிறுவனத்தின் வேந்தர் பாரிவேந்தர் கல்வி பணியுடன் தமிழ்ப்பணி ஆற்றி வருவதுடன் தமிழ் அறிஞர்களை விருது வழங்கி கெளரவிப்பது பெருமைக்குரியது.தமிழ் அறிஞர்கள் பெயரில் விருது வழங்கப்படுகிறது. தமிழுக்காக அரும்பணி ஆற்றிய முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பெயரில் விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து கோரிக்கையை ஏற்று அடுத்த ஆண்டு முதல் கலைஞர் கருணாநிதி பெயரில் விருது வழங்கப்படும் என்று டாக்டர் பாரிவேந்தர் அறிவித்தார்.

விழாவில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் என்.சேதுராமன் விருது பெற்ற முனைவர் இ.சுந்தரமூர்த்தி முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன் தமிழ்பேராய செயலர் முனைவர் பா.ஜெய்கணேஷ் உதவிபேராசிரியர் வெ.பிரபாகரன் ஆகியோர் பேசினார். முடிவில் தமிழ்ப்பேராய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கா.மதியழகன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *