எஸ் ஆர் எம் ல் ரூ.120 கோடி மதிப்பிலான ஆராய்ச்சி மைய புதிய கட்டிடம்- மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங் திறந்தார்

எஸ் ஆர் எம் ல் ரூ.120 கோடி மதிப்பிலான ஆராய்ச்சி மைய புதிய கட்டிடம்- மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங் திறந்தார்

 

காட்டாங்கொளத்தூர்  எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி மையத்தின் புதிய கட்டிடத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் திறந்து வைத்தார்.4 நாட்கள் நடைபெற்ற ஆருஷ் தொழில்நுட்ப மேலாண்மை நிகழ்வில் புதிய வடிவமைப்பு கண்டுபிடிப்பு போட்டிகளில் சாதனை படைத்தவர்களுக்கு ரூ.6 லட்சம் பரிசு தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினார்.  

நாட்டில் உயர்கல்வி வழங்குவதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வரும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மாணவர்களை சிறந்த ஆராய்ச்சியாளர்களாக உருவாக்கும் வகையில் ஆராய்ச்சி பணிகளுக்கு .நவீன ஆய்வகங்கள் அமைத்து அதிக அளவில் நிதி ஒதுக்கி ஊக்கம் அளித்து வருகிறது. மேலும் மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை வெளிக்கொண்டு வரும் வகையில் தொழில்நுட்ப மேலாண்மை திருவிழாவை நடத்தி வருகிறது.

அதன்படி  எஸ்ஆர்எம்  கல்வி நிறுவனங்களின் சார்பில் ஆண்டு தோறும் ஆரூஷ் என்கிற   மேலாண்மை திருவிழா தொழில்நுட்ப திருவிழா தேசிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது. 2007ம் ஆண்டு இதனை முன்னாள் குடியரசுத்தலைவர் மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தொடங்கி வைத்தார்.13 வது ஆண்டாக 26 ந்தேதி முதல் நான்கு நாட்கள் நடைபெறும் இந்த தொழில்நுட்பம் திருவிழாவில் நாடு முழுவதுமிருந்து 200 கல்லூரிகள் ,பல்கலைகழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களை சேர்ந்த 1000 பேர் என சுமார் 60 ஆயிரம் மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

இந்த ஆருஷ் தொழில்நுட்ப  திருவிழாவில் வடிவமைப்பு, கண்டுபிடிப்பு, கருத்தரங்கம், தொழில்நுட்ப அரங்குகள், நிக்கான், ஸ்பேஸ், ஆட்டோ டெஸ்க், போக்ஸ், ஆரக்கல், ஐபிஎம், மைக்ரோசாப்ட், அசூர் சம்பந்தப்பட்ட   பணிமனைகள் சிவிஆர்டிஈ உள்ளிட்ட நிறுவன அரங்குகள் என 50க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் இடம் பெற்றன. 

ஆரூஷ் திருவிழா நிறைவு விழா காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் உள்ள டி.பி.கணேசன் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்கள் நிறுவன வேந்தரும் பெரம்பலூர் எம்பியுமான டாக்டர் டி.ஆர். பாரிவேந்தர் தலைமை வகித்து பேசியதாவது:

நான் நாடாளுமன்றத்தில் அமைச்சரை சந்தித்து இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்தபோது இதற்கு ஏன் அழைக்கிறிர்கள் பட்டமளிப்பு விழாவிற்கு அழையுங்கள் வருகிறேன் என்றார். நான் அதற்கு எஸ்ஆர்எம் ஆரூஸ் நிகழ்ச்சியில் சுமார் 200 கல்வி நிறுவனங்கள் பங்கேற்று நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான புதிய தொழில்நுட்பம், வடிவமைப்பு, கண்டுபிடிப்புக்களை, உருவாக்க உள்ளனர் நாட்டின் பிரதமர் திட்டங்களுக்கு பங்களிப்பு வழங்க உள்ளனர் எனவே வரவேண்டும் என்றேன்.எனது அழைப்பை ஏற்று வந்துள்ள அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

நாட்டில் 900 பல்கலைகழகங்கள், 50 ஆயிரம் கல்லூரிகள் உள்ள இந்த நாட்டில் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் வலுவான நிறுவனமாக விளங்குவதற்கு பல்வேறு ஒழுங்கு முறைகளை கொண்டுள்ளது.இங்கு பயிலுபவர்களில் 80 சதவீதம் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள்.20 சதவீதம் தமிழகத்தை சேர்ந்தவர்கள். பன் மொழி பேசுபவர்கள் சங்கமிக்கும் நிறுவனமாக உள்ளது.

எஸ்ஆர்எம் மாணவர்கள் வின்வெளி துறையினருடன் இனைந்து உருவாக்கி 2011ம் ஆண்டில் வின்வெளியில் செலுத்தப்பட்ட செயற்கை கோள் 8 ஆண்டுகளுக்கு மேலாக வின்வெளி வரலாற்றில் 40,000 ஆர்பிட்டுகளை கடந்து இயங்கி வருகின்றது. இது எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தின் சாதனையாகும் என்றார்.

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பி.சத்தியநாராயணன் பங்கேற்று பேசியதாவத

ஆருஷ் தொழில்நுட்ப மேலாண்மை திருவிழா மாணவர்களிடையே அறிவை வளர்த்து கொள்ள வும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான உத்வேகத்தை அதிகபடுத்தும்.தற்போது ஆருஷ் நிகழ்வு சர்வதேச அளவில் கொண்டு செல்ல் வேண்டும். கண்டுபிடிப்பு உங்களை வெற்றிக்கு கொண்டு செல்லும் கண்டுபிடிப்புகள் மெய்த்தண்மையை பிரதிபளிக்கும் இந்த திருவிழா மாணவர்களுக்கு மட்டுமின்றி நிறுவனத்துக்கும் உதவும்.மேலும் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் தேசிய அளவில் விளையாட்டு திருவிழா நடத்த முடிவு செய்துள்ளது என்றார்.

விழாவில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ரூ.85 மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சர்.சி.வி.ராமன் பெயரிலான கட்டிடம் மற்றும் அதில் நிறுவப்பட்டுள்ள ரரூ.35  கோடி மதிப்பிலான ஆய்வக சாதனங்களை தொடங்கி வைத்து பேசியதாவது:

நிகழ்ச்சியில் இன்று ஏராளமான புதிய கண்டுபிடிப்புகள் உருவாகிறது இவை அனைத்தும் மணிதனால் உருவாகிறது.மருத்துவ துறையில் ஏராளமான முன்னேற்றங்கள் உருவாகியுள்ளது. நோயாளிகளுக்கு   மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையை தகவல் தொழில்நுட்ப வசதி மூலம் மேற்கொள்ளும் வகையில் தொழில்நுட்ப வளர்ச்சி உருவாகியுள்ளது.வின்வெளி ஆராய்ச்சி இன்று பல புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது இதற்கு புதிய கண்டுபிடிப்பு திறமைகளே என்றார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆருஷ் சிறப்பு மலரினை வெளியிட்டு ஆரூஷ் தொழில்நுட்ப மேலாண்மை திருவிழாவை தொடங்கி வைத்துபேசியதாவது

ஆரூஷ் தொழில்நுட்ப மேலாண்மை நிகழ்வு புதிய யோசனைகளை உருவாக்கும் இந்த நிகழ்வில் 200 உயர்கல்வி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்கலாம் எனக்கு உத்வேகத்தை அளித்தவர் அவரது கனவுகளை நாம் பின்பற்ற வேண்டும் .கல்வி நமது நாட்டின் முதுகெலும்பாக உள்ளது. இந்தியாவை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் தன்மை கொண்டது கல்வி. இஙகு மினி இந்தியாவே உள்ள பல மாநிலத்தை சேர்ந்த பல மொழிகள் பேசுபவர்கள் உள்ளனர். இந்த மாணவர்களால் அவர்களது குடும்பம் மட்டுமின்றி நாட்டின் எதிர்காலத்திற்கு உதவுவதுடன் அவர்களை உலக தலைவர்களாக உருவாக்கும்.

நாட்டின் முன்னாள் பிரதமர் மறைந்த அடல் பிகாரி  வாஜ்பாய் உயர்ந்தவைகளை நினைத்தால் உயர்ந்தவர்களாக உருவாகுவீர்கள் .தொழில்நுட்ப வளர்ச்சி உலகை ஒரு வகுப்பறைக்குள் கொண்டு வந்துள்ளது, அர்ப்பணிப்பு என்பது முக்கியமானது எனவே எதனையும் அர்ப்பணிப்புடன் கையாளுங்கள் என்றார்.

நிகழ்ச்சியில் ஆரூஷ் தொழில்நுட்ப மேலாண்மை யொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு ரூ.6 லட்சம் பரிசு தொகை மற்றும் சான்றுகள் அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங் வழங்கி மாணவர்களை வாழ்த்தினர்.

இதில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் சந்தீப் சன்சேத்தி பதிவாளர் முனைவர் என்.சேதுராமன் ஆரூஷ் நிகழ்வு அமைப்பாளர் முனைவர் ரத்தினம் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *