ஆல் மீடியா பிரஸ் கிளப் ஆஃப் தமிழ்நாடு – வின் 2020-ம் ஆண்டுக்கான நிர்வாக குழு பதவி ஏற்பு விழா

சென்னை, ஜன : ஆல் மீடியா பிரஸ் கிளப் ஆஃப் தமிழ்நாடு – வின் 2020-ம் ஆண்டுக்கான நிர்வாக குழு தேர்தல் 4-1-2020 அன்று சென்னை இராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவினி யூவில் நடைப்பெற்றது. இதில் தலைவர் சிவீ விக்ரம் சூரிய வர்மா, துணைத் தலைவர், ஆர்.எஸ்.பாபு, பொதுச் செயலாளர் ஜ. பத்மநாபன், துணைச் செயலாளர் அ. ஜஸ்வரியன், பொருளாளர் வி. ஆதம், அமைப்பு செயலாளர்கள் சு.சுரேஷ் குமார், ஆர்.சி.சந்திர குமார், மாநில ஒருங்கி ணைப்பாளர் கே,மகேந் திரன் ஆகியோரை நிர்வாக குழு மற்றும் பொது குழு உறுபினர் களாள், தேர்தல் அலுவலர் களான வழக்கறிஞர் 
கி.வி. ஐயாதுரை, மூத்த பத்திரி கையாளர்கள் ச. இசைக்கும் மணி, நவின்பிரபாகர் ஆகியோர் முன்னிலை யில் ஒருமனதாக, தேர்ந் தெடுக்கப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக 5-1-2020 அன்று, வெற்றி பெற்ற நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா அண்ணாசாலையில் உள்ள தாஜ் கிளப் ஹவுஸில் நடைப்பெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருமதி டாக்டர் ஜூலியட் செல்வி வீரபத்திரன் (உறுப்பினர் – மாநில மகளிர் ஆணையம், தமிழ்நாடு அரசு) திருமதி சேத்தராணி, (தனியார் பள்ளி ஆசிரியர் – ஒய்வு) அவர்களும் மன்றத்தின் உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *