சென்னை வர்தக மையத்தில் பிப்ரவரி 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வாட்டர் டூடே நடத்தும் 14வது நீர் கண்காட்சி 2020,

சென்னை வர்தக மையத்தில் பிப்ரவரி 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வாட்டர் டூடே நடத்தும் 14வது நீர் கண்காட்சி 2020, 3வது புதுப்பிக்கவல்ல எரிசக்தி 2020 கண்காட்சி சர்வதேச அளவிலான நிறுவனங்கள் பங்கேற்பு

சென்னை, பிப். 13- 2020: சென்னை வர்தக மையத்தில் வாட்டர் டூடே நடத்தும் 14வது நீர் கண்காட்சி 2020, 3வது புதுப்பிக்கவல்ல எரிசக்தி 2020 கண்காட்சி இன்று முதல் 15-ந்தேி வரை நடைபெறுகிறது. இதில் சர்வதேச அளவிலான நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

தெற்கு ஆசியாவிலேயே நீர் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு தொடர்பான பிரமாண்டமான வாட்டர் டூடே கண்காட்சியில் சர்வதேச அளவிலான பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் நீர் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு தொடர்பான, அவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அதற்கான தீர்வுகளை வழங்குகின்றனர். அவர்களின் புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொழிற்சாலை கழிவு நீர் மற்றும் வீட்டில் பயன்படுத்தப்படும் கழிவு நீரை சுத்திகரித்து தூய்மையான நீராக மாற்றும்.

இந்த கண்காட்சி இன்று துவங்கி 15-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. நீர் சுத்திகரிப்பு, தொழிற்சாலை கழிவு நீருக்கான தீர்வு, தொழிற்சாலை மற்றும் வீட்டு கழிவு நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துதல் ஆகியவற்றை மையப்படுத்தி வாட்டர் டூடே இந்த நீர் கண்காட்சியை நடத்துகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னோடிகள் உட்பட 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் தொழில்நுட்பங்களையும் தீர்வுகளையும் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தி உள்ளனர். புதுப்பிக்கவல்ல எரிசக்தி 2020 கண்காட்சி, சிறிய, நடுத்தர மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கான பல புதிய வாய்ப்புகளை உருவாக்கி உள்ளது. இதில் முன்னணி நிறுவனங்கள் சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களும் பங்கேற்றுள்ளனர்.
`ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான தூய்மையான நீர் மற்றும் கழிவு நீருக்கான தீர்வுகள்’ என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு நடத்தப்படும் இந்த கண்காட்சியானது கண்காட்சியாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்குமான திட்டங்கள், நிதி உதவி, கூட்டாண்மை உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கண்காட்சி நடைபெறும் இடத்திலேயே வழங்குகிறது. நீர் சுத்திகரிப்பு தொடர்பான நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் அந்த பிரச்சினைகளுக்கான தீர்வு ஆகியவற்றை அறிந்து தங்களது வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு நிறுவனங்கள் இந்த கண்காட்சிக்கு வந்து தங்களுக்கான தீர்வுகளை பெற்றுச் செல்கிறார்கள். இந்த கண்காட்சியில் நீர் பயன்பாடு மற்றும் ஆலை ஆபரேட்டர்கள், என்ஜீனியர்கள் மற்றும் ஆலோசகர்கள், உற்பத்தியாளர்கள், வினியோகஸ்தர்கள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வல்லுநர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்தியாவில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறைக்கு பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்ப்பதே புதுப்பிக்கவல்ல எரிசக்தி 2020 கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும். இந்தியாவில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறையின் வளர்ச்சியை துரிதப்படுத்தவும், அது தொடர்பான முக்கிய கொள்கைகள், அதில் உள்ள சிக்கல்கள் ஆகியவை குறித்து விவாதித்து அதற்கான சரியான தீர்வு வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த கண்காட்சியை வாட்டர் டூடே நடத்துகிறது.

புதுப்பிக்கவல்ல எரிசக்தி தொழில்நுட்பம், மின் பயன்பாடுகள் மற்றும் பரிமாற்றம், பயோ எனெர்ஜி, உயிரி எரிபொருள்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க பொருட்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட முக்கிய விஷயங்கள் வாட்டர் டூடே நடத்தும் இந்த கண்காட்சியில் இடம் பெறுகின்றன. இந்த கண்காட்சியில் சமீபத்திய பசுமை தொழில்நுட்பங்கள், உபகரணங்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உற்பத்தித் திறன்கள், புதிய தொழில்நுட்பங்கள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் தீர்வுகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தவும், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கும் தொழில் பங்குதாரர்களுக்கு இந்த கண்காட்சி சிறந்த தளமாக இருக்கிறது.

மேலும் இந்தியாவில் உள்ள பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட முன்னணி நாடுகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்று புதுப்பிக்கவல்ல எரிசக்தி தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகளை குறித்து பார்வையாளர்களுக்கு வழங்குகின்றனர். இந்த கண்காட்சியில் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களான கர்னாடகா, மத்திய பிரதேசம், அரியானா, ஜார்கண்ட், ஆந்திர பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்களும் அரங்குகள் அமைத்துள்ளன. விரைவாக வளர்ந்து வரும் இந்த துறையில் தொழில் பங்குதாரர்கள் தொடர்புகொள்வதற்கும், புதிய வணிக வாய்ப்புகளை ஆராய்வதற்கும் ஒரு தனித்துவமான தளத்தை இந்தக்கண்காட்சி வழங்குகிறது.

இந்த கண்காட்சியில் சிறந்த பிராண்ட்களான லான்செஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், வொன்ட்ரான் மெம்பிரேன் டெக்னாலஜி, சைலேம் இங்க், ஹில்டா ஆட்டோமேஷேன், கனடியன் கிறிஸ்டலின் வாட்டர் இந்தியா லிமிடெட், டீர்போஸ் மெம்பிரேன் கம்பெனி லிமிடெட், எவோக்வா வாட்டர் டெக்னாலஜிஸ், பெர்மியோனிக்ஸ் மெம்பிரேன்ஸ் லிமிடெட், ஜுமோ இந்தியா பிரைவேட் லிமிடெட் லிமிடெட், க்ரோப்டா என்ஜினியரிங் லிமிடெட், டுனாமிஸ் மெஷின்ஸ், மெம்பிரேன் என்ஜினியரிங் லிமிடெட். பயோக்லீனர் இங்க். நெட்குளோ கார்ப்பரேஷன், சர்ப்பிளஸ் மேனேஜ்மெண்ட் இங்க்/வாட்டர் சர்ப்பிளஸ், ஜீரோ மாஸ் வாட்டர் ஆகிய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
வாட்டர் டூடே நடத்தும் கண்காட்சிக்கு மெட்ராஸ் சேம்பர் ஆப் காமர்ஸ் அன்ட் இண்டஸ்ட்ரீ, அகில இந்திய தொழில் சங்க கூட்டமைப்பு, தமிழ்நாடு நீர் சுத்திகரிப்பு கருவி விற்பனையாளர்கள் சங்கம், நீர் தரச் சங்கம், இந்தியன் மெம்பிரேன் சங்கம் ஆகியவை ஆதரவு அளித்துள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *