நடிகை ரம்யா கிருஷ்ணன் காரிலிருந்து நூற்றுக்கணக்கான மதுபாட்டில்கள் போலீஸ் பறிமுதல் தகவல்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை வாகன சோதனை நடைபெற்ற போது நடிகை ரம்யா கிருஷ்ணனனின் சொகுசு காரில் மதுபாட்டில் கடத்தி வந்ததது தெரிய வந்தது கார் டிரைவரை கைது செய்து ஜாமினில் விடுவித்தனர் 

லாக்டவுனால் சென்னையில் டாஸ்மாக் கடை  விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது இதனால் வெளி மாவட்டங்களில் சென்னைக்கு மதுபாட்டில் கடத்தி வரபடுகின்றன .அது தொடர்பாக போலீஸ் இரவு பகலலாக தீவிர வாகன சோதனை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் நேற்று முன்தினம் இரவு கானாத்தூர் போலீஸ்சார் முட்டுக்காட்டு அருகில் வாகன சோதனை நடத்தினார் அப்போது மகாபலிபுரத்தில் இருந்து அந்த வழியாக TN O7 CQ 0099 பதிவெண் கொண்ட டயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரை நிறுத்தி விசாரணை நடத்தினார் காரில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரி வினயா கிருஷ்ணன் ஆகியோர் அமர்ந்திருந்தனர் அவர்களிடம் போலீஸ்சார் கார் டிக்கியை திறந்து சோதனை யிட வேண்டும் என தெரிவித்தனர் அவர்களின் சம்மதத்தின் பேரில் சோதனை நடத்திய போது உள்ளே 97 டின்களில் அடைக்கப்பட்ட பீர் மற்றும் 8 பிராந்தி பாட்டில்களும் இருந்தன. மது பாட்டிலை பறிமுதல் செய்த போலீஸ்சார் ரம்யா கிருஷ்ணனின் கார் டிரைவர் செல்வகுமார் என்பவரை கைது செய்தனர் .அவரை கானாத்தூர் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர் வழக்குபதிவு செய்து பின்பு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். நடிகை ரம்யா கிருஷ்ணன்  ரஜினி நடித்த படையப்பா ,  கடந்த வருடம் வெளிவந்த வசூலை அள்ளி கொடுத்த படம் பாகுபலி படத்தில் நடித்துள்ளார்.

ஊரடங்கு நேரத்தில் பிரபலமான ஒருவரின் காரில் இவ்வளவு மது புட்டிகள் சிக்குவது இதுதான் முதல் முறை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *