SRM பல்கலைக்கழகம் 13ஆம் பட்டமளிப்பு விழா காட்டாங்குளத்தூர்.

சிந்தனைகளுக்குக் கதவைத் திறந்து நன்கு கற்கவும்!

மாணவர்களுக்கு இன்போசிஸ் நிறுவனர் திரு. என்.ஆர்.நாராயண மூர்த்தி அவர்களின் அறிவுரை

 

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் 13ஆம் பட்டமளிப்பு விழா அதனுடைய காட்டாங்குளத்தூர் வளாகத்தில் இன்று 18.11.2017 காலை நடைபெற்றது. அதில் புகழ்பெற்ற தகவல் தொழில் நுட்ப நிறுவனமான  Infosis நிறுவனர் பத்ம விபூஷண்

திரு. என்.ஆர்.நாராயணமூர்த்தி தலைமை விருந்தினராக பங்கேற்று நிகழ்த்திய உரை பின்வருமாறு :-

உலகமயமாதலின் தாக்கங்களை உடனடியாக உணர்கின்ற உலகத்தில் ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையிலும் கிராமப்புற – நகர்புற மக்களுக்கிடையிலும் அதிகாரம் செய்கிறவர்களுக்கும் அடங்கிப் போகிறவர்களுக்கிடையிலுமான எல்லைகள் மேலும் மேலும் தெளிவற்று போகிற நிலையில் போட்டிகள் அதிகமாகியுள்ளன; வாய்ப்புகள் பெருகியுள்ளன; கடுமையான சவால்களை எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டிய பொன்னான காலம் இது என்று மாணவர்களுக்கு அறிவுரைத்தார்.

     மேலும் அவர், உலகமயமாதலின் தாக்கங்கள் நிறுவனங்கள் அதிகமான போட்டிகளை எதிர்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இன்றைக்கு புதுமுறைகள் வேகமாக இடம்பெறுகின்றன. ஆகவே, நீங்கள் உங்கள் போட்டியாளர்களை விட உங்களின் சிந்தனைவோட்டத்தை வேகமாக அதிகரித்துப் புதுமைகளை கண்டறிய வேண்டும் என்று கூறினார்.

     திரு. நாராயணமூர்த்தி அவர்கள் அந்தப் பட்டதாரிகளை, ஐயம் திரிபற மதிப்பிடுகின்ற தலைமைப் பண்பு போன்ற முக்கியமான பண்புகளைப் பெற்றிருக்கின்ற திறமையானவர்களாக தங்களை வளர்த்துக்கொள்வதில் மிகவும் கவனம் செலுத்தவேண்டும் என்றுரைத்தார். மகாத்மா காந்தி தான் பேசியவாறு நடந்துகொண்டார். மக்களின் நம்பிக்கையைப் பெற்றார். ஒவ்வொரு இந்தியனின் ஆதரவைப் பெற்றார் என்று கூறிய அவர், இளைஞர்களும் இவ்வாறே தங்களைச் சுற்றியுள்ள மக்களிடம் ஒரு வலுவான மதிப்புமிக்க அமைப்பை உருவாக்குவதில் பாடுபட வேண்டும் என்றார். தங்களிடம் புதிய சிந்தனைகள் தோன்ற நீங்கள் தயாராக இருக்க வேண்டும். புதிய சிந்தனைகளைக் கற்பதற்கும் காலாவதியான சிந்தனைகளை விட்டுவிடுவதற்கும் தயாராக வேண்டும். நீங்கள் புதிய முறைகளை கற்க வேண்டும். கேள்வி ஞானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவர் ஆணா பெண்ணா என்பதை விட சிந்தனைகளின் தொகுப்புதான் மிக முக்கியமானது என்றும் கூறினார்.

     மேலும் அவர், குழுப் பணியாகவும், கடினமான பணியாகவும் தங்கள் பணியை இந்தப் பட்டதாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார். ஒவ்வொரு செயலுக்கும் தீர்வளிக்கிற திறமையைத் தனிப்பட்ட ஒருவர் மட்டுமே பெற்றிருக்க முடியாது. குழுப் பணியே மிகவும் முக்கியமானது. உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் உங்களை தகுதியுள்ளவர்களாகவும் வெளிப்படைத் தன்மையுடையவர்களாகவும் இருப்பதற்குப் பழகுங்கள் என்றும் கூறினார். மேலும் அவர், உங்களுடைய செயற்பாடுகள் உங்களுக்கு அங்கீகாரத்தைக் கொடுக்கும். அது உங்களுக்கு மதிப்பைக் கூட்டும். கடைசியாக நீங்கள் அதிகாரத்தைப் பெறுவீர்கள். மேலும், கடின உழைப்பு, திறமை, நேர்மை, ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் கலவையே ஒரு செயலாகும் என்றும் கூறினார். மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பது முக்கியமென்பதால் அவர் தகவல் தொடர்புத் திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டியதன் தேவையை வலியுறுத்திக் கூறினார். உங்களில் ஒவ்வொருவரின் வெற்றிக்கும் இது மிக முக்கியமானதாகும் என்று அறிவுரைத்தார்.

     இந்த விழாவில், இந்திய அரசின் அணு ஆற்றல் துறையின் செயலரும் அணு ஆற்றல் ஆணையத்தின் தலைவருமான பத்ம ஸ்ரீ டாக்டர் சேகர் பாசு அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அவர் தனது உரையில், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தைப் புகழ்ந்துரைக்கும்போது, சிறிய தொடக்கத்திலிருந்து மிகப்பெரிய பல்கலைக்கழகமாக மிக அழகான சூழலுடன் வளர்ந்திருக்கிறது என்றும் இந்தியா பல துறைகளில் உலகத் தலைமையைப் பெற்றிருக்கிறது என்றும் உரைத்தார்.

    

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தலைவர் டாக்டர் ஆர்.பி. சத்தியநாராயணன் தனது வரவேற்புரையில் திரு. நாராயண மூர்த்தி அவர்களை ஓர் உண்மையான ஊக்கமளிப்பவராகவும் இந்திய தகவல் தொழில் நுட்பத் துறையின் தந்தையாகவும் மதிப்பீடு செய்தார். மேலும், திரு நாராயணமூர்த்தி அவர்கள் உடல்நலம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் காட்டுகின்ற மனிதநேய செயற்பாடுகளை டாக்டர் சத்திய நாராயணன் புகழ்ந்துரைக்கின்றபோது  அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது மிக நிறைய இருக்கின்றன என்றும் கூறினார். திரு.நாராயண மூர்த்தி அவர்கள் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடியபோது, மேற்கு உலகத்தின் சிக்கல்கள் பற்றி மாணவர்கள் கவலைப்படுவதை விட்டு இந்தியாவில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற எளிய மனிதர்களின் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு முன்வர வேண்டும் என்று கூறியதை நினைவுகூர்ந்தார்.

     எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் இந்தப் பட்டமளிப்பு விழாவிற்குத் தலைமையேற்றுச் சிறப்பித்தார்.

     இந்த விழாவில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் புலத்தின் அனைத்து துறைகளிலும் ஏறத்தாழ  6,150 இளநிலை பட்டதாரிகளும், 47 முனைவர் படிப்பு மாணவர்களும் தங்களுடைய பட்டங்களைப் பெற்றார்கள். 50 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அவர்கள் தங்களின் கல்வி நிலையில் சிறப்பிடம் பெற்றமைக்காகத் தங்கம், வெள்ளி, வெண்கலப் ப

தக்கங்கள் வழங்கப்பட்டன.

BE OPEN TO IDEAS AND WILLI

NG TO LEARN, INFOSYS FOUNDER TELLS SRM GRADUATES… .
The times are extraordinary for competition is intense, the opportunities are huge and challenges are daunting where the implications of globalization is readily felt in a world where the boundaries between the rich and poor; rural and urban and the powerful and meek are getting increasingly blurred said Padma Vibhushan Mr. N.R. Narayana Murthy, Founder of the Information Technology Giant Infosys. Mr. Narayana Murthy was the Chief Guest at SRM University’s 13th Convocation at the Kattankulathur Campus.
“The implications of globalization are that corporations are facing extreme competition; the pace of innovation is faster today; you have to quickly develop your ideas and innovate faster than your competitors” he said. Nearly 6150 Under Graduates in all disciplines of the Faculty of Engineering and Technology and 47 Doctoral students received their degrees. More than 50 students were awarded Gold, Silver and Bronze medals for their academic achievements.
Mr. Narayana Murthy called on the graduates to focus on becoming able managers with crucial attributes such as leadership by example with no suspect value system. “Mahatma Gandhi walked the talk. He won the trust, confidence and support of every Indian”, The Infosys Founder said going on to call on the youngsters to develop a strong value system so as to energies people around them. “You have to be open to new ideas and be willing to learn new ideas and unlearn outdated ideas. You have to learn new cultures and paradigms. Age is not a factor for learning. Learn to question. The hierarchy of ideas is more important, not of men and women” Mr. Narayana Murthy remarked.
The mentor of the Information Technology industry called on the graduating class to embrace team work and hard work. “No individual… possesses the skill of every task. Team work is extremely crucial. Please practice meritocracy and transparency in every one of your transactions”, Mr. Narayana Murthy said adding that performance led to recognition which led to respect and finally power; and performance had the mix of hard work, smartness, honesty and integrity. The Infosys Founder also stressed on the need for good communication skills for it was important that others understood. “It is absolutely crucial to the success of every one of you” he said
A highlight of the event was the conferment of the Honorary Degree of Doctor of Science (D.Sc.) (Honoris Causa) on Padma Shri Dr. Sekhar Basu, Chairman, Atomic Energy Commission and Secretary, Department of Atomic Energy, Government of India. Praising SRM University from its modest beginning to a large multi-stream institution with a beautiful ambience, Dr. Basu maintained that he was receiving the Honorary Degree on behalf of all his colleagues. “India is a world leader in many areas” he said.
In his welcome address the President of SRM University, Dr. R.P. Sathyanarayanan referred to Mr. Narayana Murthy as a “true inspiration” and the “Father of the Indian IT sector”. “There is a lot and so much to learn from Mr. Murthy”, Dr. Sathyanarayanan said going on to mention the Infosys Founder’s philantrophy especially in the realm of health care and education. The President recalled that in Mr. Narayana Murthy’s interaction with SRM students, the IT mentor called on students to solve not the problems of the western world but that of the problems of the common person in rural and urban India.
The Chancellor of SRM University, Dr. T.R. Paarivendhar presided over the Convocation.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *