பெருந்தலைவர் காமராஜரின் 118 வது பிறந்த நாளை நலத்திட்ட பணிகளோடு கொண்டாடிய கற்பக விருட்சம் அறக்கட்டளை

பெருந்தலைவர் காமராஜரின் 118 வது பிறந்த நாளை நலத்திட்ட பணிகளோடு கொண்டாடிய கற்பக விருட்சம் அறக்கட்டளை.

மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்த காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரியாணி பட்டியல் இயங்கிவரும் ரெனிவல் பவுண்டேஷன் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் 50 நபர்களுக்கு மதிய உணவு ₹5,000 மதிப்பில் வழங்கப்பட்டது.

இலவச கல்வியை கொண்டு வந்த காமராஜரின் பிறந்த நாளை திருவள்ளூர் மாவட்டம், வஞ்சிவாக்கம் கிராமத்தில் *விவேக் அம்பேத் கலாம்* பாடசாலையில் படிக்கும் 135 குழந்தைகளுக்கு ₹6,000 மதிப்பில் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

மேலும் சென்னை காமராஜர் இல்லத்தில் வருகை தந்த 50 பார்வையாளர்களுக்கு கபசுரகுடிநீர் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது.

நிதி உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கும், தன்னார்வாலர்கள் அசோக், வீரமணி, நண்பர்கள் விஜய் சாம்பு, கிச்சா மற்றும் சுப்ரமணிய பாரதி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *