எனது மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளையின் 4 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டின் பருவ மழைக் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் பனை மற்றும் நாட்டு மரக் கன்றுகள் அரசு வழிகாட்டுதலின் படி, ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏரிக்கரைகள்,மலை குன்றுகள், பள்ளி,கல்லூரி , தனியார் மற்றும் அரசு கட்டிடங்களில் நட்டு அதை பாதுகாக்கவும் வழி வகை செய்திருக்கிறோம் என்பதை தங்களின் மேலான பார்வைக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் சிறப்பாக நடந்திட எங்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நாள் : 11.08.2020 செவ்வாய்க் கிழமை
இடம் : அன்னை வேளாங்கண்ணி பொறியில் கல்லூரி , பெருங்களத்தூர் , சென்னை .
நேரம் : 7am லிருந்து 11am
மிக்க நன்றி .!
தமிழ் அன்புடன்
மு. சௌந்தரராஜா B.E,M.A
நடிகர் & சமூக ஆர்வலர்