அவள் அப்படித்தான் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது

அவள் அப்படித்தான்
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது

எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் தென்னிந்திய திரைப்பட இயக்குனர்களாலும் தயாரிப்பாளர்களாலும் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக இருந்தவர் சில்க் ஸ்மிதா
அவருக்கு முன்னாலே பல கவர்ச்சி நடிகைகளை சினிமா உலகம் பார்த்து இருக்கிறது என்றாலும் தன்னுடைய மயக்கும் விழிகளாலும், வாளிப்பான உடல் கட்டினாலும் மொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கட்டிப் போட்ட ஒரு கவர்ச்சி நடிகை அவர்.
ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து சிறுவயதில் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்ட விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதா தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் ஏராளம்
கணக்கிலடங்காத திருப்பங்கள் நிறைந்த அவருடைய வாழ்க்கையை “அவள் அப்படித்தான்” என்ற பெயரிலே காயத்ரி பிலிம்ஸ் சித்ரா லட்சும மணனும் முரளி சினி ஆர்ட்ஸ் எச். முரளியும் இணைந்து தயாரிக்கின்றனர்
பல விளம்பரப் படங்களை இயக்கியவரும் “கண்ணா லட்டு தின்ன ஆசையா” என்ற வெற்றிப் படத்தை இயக்கியவருமான மணிகண்டன் இந்தப் படத்தை இயக்குகிறார்
“சில்க் ஸ்மிதாவின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் அவருடைய காந்தக் கண்கள். அப்படிப்பட்ட அழகான கண்கள் உடைய ஒரு அழகான பெண்ணை இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதற்காக தேடிக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் இப்படத்தின் இயக்குனரான மணிகண்டன்
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்கவிருக்கிறது

Aval Appadithan (She’s like that only)
A biopic on Silk Smitha

Gayathri Films’ Chithra Lakshmanan and Murali Cine Arts H Murali are planning to do a biopic on late actress Silk Smitha. ‘Kanna Laddu Thinna Aasaiya’ director K S Manikandan has been roped in to direct this sensational movie
Silk Smitha was the most sought after actress by many directors and producers in the film industry during the 80s and early 90s. Distributors and movie-makers wanted to cast the sultry siren so that they could reap financial dividends and also make use of her glamour quotient as she was one of the biggest crowd pullers during her peak period.
Though the celluloid has seen several such glamour dolls earlier, none could reach her heights. Her eyes spoke a thousand words and Silk was unapologetically sexy. She made many youngsters lose their sleep with her voluptuous self.
Silk Smitha hailed from a poor family and was struggling to make her ends meet before she tasted success in the film industry. ‘Aval Appadithan’ will have interesting and in-depth details of the actress’s life which saw various twists and turns. are producing the movie together.
Director Manikandan says the reason for Silk’s success can be attributed to her eyes which told so many tales. “Her hotness quotient too has been unmatched till date. And to play her character, we are trying to get the right person who can do justice to the role.”
The shooting of the film is slated to happen this November.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *