அரியலூர் மாவட்டம் அயன் சுத்தமல்லி கிராமத்தில் வசிக்கும் கருப்பையா அவர்களின் மகன் விஜயசாரதி என்ற 12 வயது சிறுவன் இரும்பு கம்பி, மூங்கில், சைக்கிள் வீல் டயர் வைத்து சரட்டு வண்டி போல் விளையாட்டுக்காக வண்டியை தயாரித்துள்ளார் .
அந்த வண்டி இப்பொழுது மணல் மூட்டை, சிமெண்ட் மூட்டை ,கருங்கல் ,விவசாய பொருட்கள் எடுத்துச் செல்ல பயன்படுத்துகிறார்கள் இந்த வண்டியை தயாரித்த சிறுவன் விஜயசாரதியை ஊக்கப்படுத்தும் விதமாக அவரது வீட்டுக்கு அரியலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட பொறுப்பாளர் ஜெ நிஜாமுதீன் நேரில் சென்று அச்சிறுவனை பாராட்டி பேண்ட் ஷர்ட் பழங்களும் ரூபாய் 500ம் கொடுத்து விஜயசாரதியை பாராட்டினார்கள் .மேலும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜசேகர் ஒன்றிய செயலாளர் சாமிநாதன் ஒன்றிய துணை செயலாளர் தர்மராஜ் ஆகியோர் ஆகியோர் உடன் இருந்து வாழ்த்தினார்கள்