உறவுகள் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பாக இலவச நல உதவி திட்டங்கள் வழங்கி மற்றும் மதிய உணவு வழங்கியது.

உறவுகள் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை

 

 

 

 

 

இரண்டு வருடங்களாக ஆரம்பித்து அறக்கட்டளையின் மூலம் ஏழை எளிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கு கல்வி கட்டணம் மற்றும் சீருடைகள் இலவசமாக வழங்கி வருகிறோம் மற்றும் காம்ரேட் சட்ட அலுவலகம் மூலம் இலவச சட்ட ஆலோசனைகளும் வழங்கி வருகிறோம் மேலும் கொரானா19 போன்ற பேரிடர் காலங்களில் எங்களின் அறக்கட்டளையின் மூலம் ஏழை மக்களுக்கு தேவையான அத்யாவசிய பொருட்கள் மற்றும் உணவுகள் உடைகள் வழங்கி வந்துள்ளோம் மேலும் ஏழை எளியோர் பயனடையும் விதத்தில் தினந்தோறும் இலவச மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தி இன்றுடன் 85வது நாளை எட்டியிருக்கிறோம் இதனை சிறப்பிக்கும் பொருட்டு விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு விருகை வி.என் ரவி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் திரு எம் யுவராஜா ஆகியோர்களின் தலைமையில் அறக்கட்டளையின் கௌரவதலைவர் திரு திநகர் மாயா மற்றும் உறவுகள் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளையின் நிறுவனர் வழக்குரைஞர் திரு மு நம்பிராஜன் அறங்காவலர் திரு இ யுவராஜ் பொறுப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் திரு எம் கே விஜய் கந்தசாமி மற்றும் அறங்காவலர் திரு நரேந்திர குமார் ஆகியோர்களின் முன்னிலையில் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திமுடித்துள்ளோம் இந்நிகழ்ச்சியில் திரு ஜெ எஸ் செந்தில் திரு ஸ்பீடுகுமார் திரு ஆர் கே இராமலிங்கம் திரு அன்னை ஜெகன் திரு எ ராஜாராம் திரு ஜெ துரை முருகன் திரு எம் ராஜா மற்றும் காம்ரேட் நண்பர்கள் மற்றும் உறவுகள் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி மாநில மாவட்ட பகுதி வட்ட நிர்வாகிகள் மற்றும் அனைதது இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாநில மாவட்ட பகுதி மற்றும் வட்ட நிர்வாகிகள் ஆகியோர்கள் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்புபடுத்தினர் இனி வரும் காலங்களில் எங்களின் பணி தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருப்போம் ஏழை எளிய மக்கள் பயன்பட்டுக்கொண்டே இருப்பார்கள் என்பதனை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி வணக்கம்
மு நம்பிராஜன் வழக்குரைஞர் மற்றும் உறவுகள் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளையின் நிறுவுனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *