*கம்யூனிஸ்ட் தலைவர்*
*தோழர்: தா.பாண்டியன்*
*அவர்கள் இயற்கை எய்தினார்!*
*செய்திப்புறா ஆழ்ந்தஇரங்கல்!*
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்,
மூத்தத்தலைவர் *தோழர்: தா.பா.*
அவர்கள் உடல் நலமின்மையால்
சென்னை ராஜிவ்காந்தி அரசு
பொது மருத்தவமனையில்
தீவிர சிகிச்சை பிரிவில்
அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை
பலனின்றி இன்று *26/02 2021*
காலை *10.30* மணிக்கு இயற்கை
எய்திய அதிகாரபூர்வ தகவல்,
நம்மை பெரிதும் வருத்துகிறது!
தோழர் அவர்களின் பிரிவால்
துயருறும் குடும்பத்தார், நட்புகள்,
இயக்கம் சார்ந்த தோழர்கள்,
பொதுமக்கள் அனைவருடனும்,
நாமும் நமது இரங்கலையும், ஆழ்ந்த வருத்தத்தையும்
பகிர்ந்து கொள்வோம்!
தோழர்: தா. பாண்டியன்
அவர்களது பூதவுடல், சென்னை
முகப்பேர், *TVS* காலனி *2வது*
பிரதான சாலை ( செரியன்
ஃபிரண்டியர் மருந்துவமனை
சமீபம் ) அவரது இல்லத்தில்
இன்று பிற்பகல் *02:00* மணி
வரையிலும், சென்னை
தி.நகர், போக் ரோடு,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
மாநில தலைமையகம், பாலன்
இல்லத்தில் மாலை *07:00* மணி
வரையிலும் பொதுமக்கள்
அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது.
அதன் பின்னர், இன்றிரவு
மதுரையிலுள்ள அவரது இல்லம்
கொண்டு சென்று *27/02/2021*
காலை *09.00* மணிக்கு, பொது
மக்கள் இறுதி அஞ்சலி செலுத்த
வைக்கப்படுகிறது.
ஆழ்ந்த வருத்தத்துடன்.,
*~செய்திப்புறா.*
??????????????????????
?️???️???️???️???️???️