தேசிய அளவிலான ஜே.இ.இ மெயின்- 2021 தேர்வுகளில் சிறந்து விளங்கும் வேலம்மாள் பள்ளி மாணவர்கள்.

தேசிய அளவிலான  ஜே.இ.இ மெயின்- 2021 தேர்வுகளில் சிறந்து விளங்கும் வேலம்மாள் பள்ளி மாணவர்கள்.

அகில இந்திய அளவிலான ஜே.இ.இ மெயின்- 2021 தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு வேலம்மாள் நெக்ஸஸ் குழுமம் தனது மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது .

வேலம்மாள் நெக்சஸ் குழுமத்துடன் ஒருங்கிணைந்த மேல்அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயாவின்
 IIT மாணவி
 பி .ஆர் .கே அமிழ்தினி
இளங்கலை.திட்டப் பிரிவு தேர்வில் 99.93 சதவிகிதம் மதிப்பெண் மற்றும்  இளங்கலைப் பொறியியல் (B.E), தொழில் நுட்பத் (B.TECH) தேர்வில் 99.31 சதவிகிதம் மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.
இதன்மூலம் தமிழ்நாடு மாநில  சாதனையாளராகவும்   அகில இந்திய அளவில் பெண்கள் பிரிவின் ஐந்தாவது இடத்தையும் பெற்று  இரட்டைச் சாதனை படைத்துள்ளார்.

மேலும் அதே பள்ளியின் மற்றுமொரு சாதனை  மாணவன் தக்ஷின் இந்திய ஒலிம்பியாட் கணிதத் தகுதித்தேர்வில் பங்கேற்று
 கணிதத்தில் 100 சதவிகித மதிப்பெண்களுடன்  வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றதுடன் JEE MAIN 2021- இளங்கலைப் பொறியியல் (B.E), இளங்கலைத் தொழில்நுட்பத்(B.TECH) தேர்வுகளில்
 99.36 சதவிகித மதிப்பெண்களைப்   பெற்று சாதனை படைத்துள்ளார் .

தரமான கல்வியில் எப்பொழுதும் தன்னை நிரூபித்துக் கொள்ளும் வேலம்மாள் பள்ளி தற்பொழுதும் வென்றுள்ளது.

பள்ளி நிர்வாகம் வெற்றிபெற்ற மாணவர்களின் குறிப்பிடத்தக்க செயல்திறனை வாழ்த்துவதோடு அவர்கள் மென்மேலும் உயர ஆசீர்வதிக்கிறது.