வடபழனியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனை திரை பிரபலங்களுடன் இணைந்து இரத்ததான முகாம் நடத்தியது !


பயத்தை ஒழியுங்கள் – இரத்த தானம் செய்யுங்கள்

~ வடபழனியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனை திரை பிரபலங்களுடன் இணைந்து இரத்த தானத்தை ஊக்குவிக்க மற்றும் இந்த தொற்று காலத்தில் இரத்த தானம் பற்றிய பயத்தை போக்க அதன் மருத்துவமனையில் இரத்த தான முகாமை நடத்தியது

சென்னை, ஜூன் 15, 2021: கோவிட் -19 நம்மைச் சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைத்துள்ளது. கோவிட்டின் தொடர் அலைகள் மற்றும் நோய் தாக்கத்தின் வேகம் சாதாரண மனிதர்களிடம் மட்டுமல்ல இரத்த தானம் செய்பவர்களிடமும் பயத்தை உருவாக்கியது. கோவிட், இரத்த தானம் செய்பவர்களிடையே இரத்த தானம் குறித்த புதிய கட்டுக்கதைகளையும் மற்றும் சந்தேகத்தையும் உருவாகியுள்ளது.

இரத்தத்தை ஆய்வகங்கள் அல்லது தொழிற்சாலைகளில் தயாரிக்க முடியாததால் நன்கொடையாளர்கள் தாராளமாக இரத்தம் தானம் செய்ய முன்வர வேண்டும். தன்னார்வ இரத்த தான பாரம்பரியத்தை உயிரோடு வைத்திருக்க, இரத்த தானம் செய்யும் நன்கொடையாளர்களை ஊக்குவிக்க, இரத்த தானம் குறித்த கட்டுக்கதைகள் மற்றும் சந்தேகங்களை அகற்றுவதற்கும் சினிமா பிரபலங்களான அஞ்சலி ராவ் (நடிகை), பிரவீன் சரவணன் (தயாரிப்பாளர்), சுரேஷ் ரவி (நடிகர், தயாரிப்பாளர்), ரஞ்சித் மணிகண்டன் (திரைப்பட இயக்குனர்) மற்றும் மரு. சஞ்சய் பாண்டே (மண்டல இயக்குனர், ஃபோர்டிஸ்) உடன் இணைந்து ஃபோர்டிஸ் மருத்துவமனை இந்த இரத்த தான முகாமை நடத்தியது

இந்நிகழ்ச்சியில் பேசிய ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மண்டல இயக்குநர் டாக்டர் சஞ்சய் பாண்டே, “கோவிட்-19 நாட்டிலுள்ள இரத்த வங்கிகளின் இரத்த இருப்பை பாதித்துள்ளது. கோவிட்-19 காரணமாக தன்னார்வ இரத்த தானம் செய்தல் மற்றும் தேசிய இரத்த விநியோகத்தை பாதித்துள்ளது, மேலும் தொற்றுநோய் காலத்தில் மாநிலத்தின் இரத்த தான இயக்கம் 20 சதவீதம் சரிந்துள்ளது. WHO இன் படி, எந்தவொரு நாட்டிற்கும் அந்த நாட்டின் இரத்த மாற்றுத் தேவையை பூர்த்தி செய்ய அதன் மக்கள் தொகையில் 1 சதவீதம் பேர் இரத்த தானம் செய்ய வேண்டும். இந்தியாவில், எப்போதும் 1 மில்லியன் இரத்த யூனிட் பற்றாக்குறை உள்ளது. இந்த பற்றாக்குறையை அகற்ற, இந்தியாவின் இளைஞர்களை இரத்த தானம் செய்ய ஊக்குவிக்க வேண்டும். கோவிட்-19-லிருந்து மீட்கப்பட்ட ஒருவர் தனது தனிமைப்படுத்தப்பட்ட அல்லது சிகிச்சைக்கு பிந்தைய 28 நாட்களுக்குப் பிறகு இரத்த தானம் செய்யலாம் மற்றும் தடுப்பூசி போட்ட நபர் தடுப்பூசி போட்ட 14 நாட்களுக்குப் பிறகு தானம் செய்யலாம்.”

இந்த முன்முயற்சி குறித்து ஃபோர்டிஸ் மருத்துவமனையின் இரத்த மாற்று மருத்துவ ஆலோசகர் டாக்டர் சண்முகா பிரியா கூறுகையில், “இரண்டாவது அலையின் போது கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அறுவை சிகிச்சைகளுக்கான இரத்தத்தின் தேவையும் குறையவில்லை. சாலை விபத்துகள் குறைந்து இருந்தாலும் கர்ப்பிணிப் பெண்கள், தலசீமியா மற்றும் புற்றுநோய் நோயாளிகளுக்கு இரத்தம் தேவை இருக்கத்தான் செய்கிறது. முதல் மற்றும் இரண்டாவது அலைகள் இரத்த இருப்பு பாதிப்பின் அளவை கணித்துக் கொண்டிருக்கும்போதே மூன்றாவது அலை பற்றிய விவாதங்கள் பயத்தை கிளப்புகிறது. COVID வரம்புகள் காரணமாக இரத்த தான முகாம்களும் இப்போது அடிக்கடி நடத்தப்படுவதில்லை. முக்கியமாக இரத்த தானம் செய்யும் மாணவர்கள், இளைஞர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கோவிட் கட்டுப்பாடுகளால் இரத்த தானம் மற்றும் இரத்த தான முகாம்கள் நடத்த முடியாமல் உள்ளது. ஃபோர்டிஸ் மருத்துவமனையின் இந்த முயற்சி, நன்கொடையாளர்களை இரத்த தானம் செய்ய முன்வர ஊக்குவிக்கும், ”என்று அவர் கூறினார்.

ஃபோர்டிஸ் மருத்துவமனை, வடபழனி பற்றி:
வடபழனி ஃபோர்டிஸ் மருத்துவமனை நாட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும் சுகாதாரக் குழுவான ஃபோர்டிஸ் ஹெல்த்கேரின் ஒரு அங்கமாகும். சென்னையில், ஆற்காட் சாலையில் அமைந்துள்ள இம்மருத்துவமனை ஃபோர்டிஸ் குழுமத்தின் இரண்டாவது மருத்துவமனை ஆகும். 250 படுக்கைகள் கொண்ட இந்த மல்டி சூப்பர்-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சென்னை நகர மக்களின் மருத்துவத் தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது. இதில் இருதயவியல், கார்டியோ-தொராசிக் அறுவை சிகிச்சை, நுரையீரல், நரம்பியல், சிறுநீரகம், நீரிழிவு நோய், எலும்பியல் மற்றும் முதுகெலும்பு, காஸ்ட்ரோஎன்டாலஜி, ஹெபடாலஜி, பொது அறுவை சிகிச்சை மற்றும் பிற சிறப்பு மருத்துவ பிரிவுகள் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்:
ஏவியன் வீ, சென்னை
கிருஷ்ண மூர்த்தி – 9442191717 / ஹரிகுமார் – 9940408355