அமெரிக்க பாணியில் எளிய முறையில் ஆங்கிலம் கற்பிக்கும் முயற்சியைத் துவங்கியுள்ள வேலம்மாள் நெக்சஸ் வலைத்தொடர் நிகழ்வுகள்.

அமெரிக்க பாணியில் எளிய முறையில் ஆங்கிலம் கற்பிக்கும் முயற்சியைத் துவங்கியுள்ள வேலம்மாள் நெக்சஸ் வலைத்தொடர் நிகழ்வுகள்.

அமெரிக்காவின் “வெஸ்டர்ன் அலமன்ஸ்” கல்வி நிறுவனத்தின் ஆங்கில நிபுணர், டயானா லோரெனா வாஸ்குவேஸ் மோரேனோ அவர்கள் தொகுத்து வழங்கும்
‘ அமெரிக்கன் பாணியில்
எளிய முறையில் ஆங்கிலம்’ மெய்நிகர் வலைத்தொடர் நிகழ்வு, 2021 ஜூன் 14 முதல் தினமும் மாலை 6 மணிக்கு வேலம்மாள் நெக்ஸஸ் யூடியூப் வலையொளியில் தொடங்கியது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர் அவர்கள்
– உணவு, பயணத் திட்டங்கள், தொழில்நுட்பம் போன்றவற்றுடன் தொடர்புடைய சொற்களஞ்சியங்களைப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களின் கற்றல் திறனை வளப்படுத்தினார்.

அமெரிக்காவின் ஆங்கில பாணியில் சரியான உச்சரிப்புடன் பரந்த சூழல்களில் அவர்கள் கற்றுக்கொண்ட சொற்களை எளிமையான முறையில் எதிர்கொள்ளவும் அவர்களின் கற்றலை விரிவுபடுத்துவதற்கும் மற்றும் கேட்கும் திறனை மேம்படுத்துவதற்குமான
எளிய செயல்பாடுகளும் நடத்தப்பட்டன,
இதனால் பயனாளர்கள் மொழியின் மீது தங்கள்
திறனை மேம்படுத்த இந்நிகழ்வு ஒரு வாய்ப்பாக அமைந்தது.

அமர்வின் முடிவில், மாணவர்கள் புதிய தகவல்களுக்கு வரம்பற்ற அணுகுமுறைகளை வழங்கும் வலுவான சொற்களஞ்சியங்களின் தொகுப்பைக் கற்றுக்கொண்டனர்.

மாணவர்களின் சொல்லகராதியைச் செறிவூட்டும் வகையில் அமைந்த கலந்துரையாடல்கள் நிகழ்ச்சியின் விறுவிறுப்பைக் கூட்டி பல ஆயிரம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

தொடர்ந்து வேலம்மாள் வலையொளியில் வரவிருக்கும் அமர்வுகளுக்காகக் காத்திருங்கள் .
மேலும் விவரங்களுக்கு 8056063519 -ஐ தொடர்பு கொள்ளவும்.