தமிழகத்துக்கான டாடா ஸ்கையின் புதிய பிரச்சாரம் பொழுதுபோக்கை ‘வேற லெவலுக்கு’ எடுத்துச் செல்லும்

சென்னை:  2021 செப்டம்பர் 6 இன்றைய தினத்தை விட நாளைய தினத்தைச் சிறப்பாக்கும் தனது பிராண்ட் உறுதிமொழிக்கு உண்மையாக இருக்க, இந்தியாவின் முன்னணி சேனல் விநியோகம் மற்றும் பேடிவி தளமான டாடா ஸ்கை திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையில் தனது புதிய விளம்பரப் பிரச்சாரம் மூலம் தமிழகத்திலுள்ள வாடிக்கையாளர்களுக்குப் பிராந்திய சேனல்களை விரிவுபடுத்தி உள்ளது. அனைத்துப் பார்வையாளர்கள் ரசனையோடுஒத்திசையும் வகையில் ‘வேற லெவல்’ என்னும் இந்த விளம்பரப் பிரச்சாரம் டாடா ஸ்கை வழங்கும் மேம்பட்ட பொழுதுபோக்கு வாய்ப்புகளை –  கடுமையான போட்டி நிலவும் கட்டணப் பிரிவில், ஒன்-டச் ரிமோட் மூலம் கிடைக்கும் பிராந்திய ஃபேமிலி பேக்குகள் பற்றி விரிவாக விளக்கும்.  

உள்ளூர் விஷயங்களில் ஆழமாக கவனம் செலுத்தியுள்ள இந்தப் விளம்பரப் பிரச்சாரப் படத்தை ஒகில்வி இந்தியா உருவாக்கி உள்ளது. டாடா ஸ்கை இணைப்பைப் பெறுவதன் மூலம் கிடைக்கும் பலன்களை வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிப்பதை நோக்கமாகக் கொண்டு பிடிஎல் முனைவு வலையமைவு மூலம் பல்வேறு விற்பனை சேனல்களில் தடம் பதித்துள்ளது.  இந்தப் பிரத்யேக தொடர்புத் திட்டம் அச்சு, தொலைக்காட்சி, ஓஓஹெச் ஆகியவற்றில் விரிவடைவதுடன், மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத இடங்களிலுள்ள உள்ளூர் பார்வையாளர்களோடு ஒத்திசையும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

விளம்பரப் பிரச்சாரப் பட அறிமுகம் குறித்து டாடா ஸ்கை முதன்மைத் தொடர்பு அதிகாரி அனுராக் குமார் கூறுகையில் ‘தங்களது தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் அவற்றில் காணும் நிகழ்ச்சிகளுடன் பிராந்திய பார்வையாளர்களுக்கு வலுவான தொடர்புண்டு.  இதைக் கருத்தில் கொண்டே, தொலைக்காட்சி பார்க்கும் அனுபவத்தை மதிப்பும், அர்த்தமுள்ளதாகவும் உருவாக்குவதில் டாடா ஸ்கை எப்போதுமே முன்னணியில் உள்ளது. தமிழகத்துக்கான எங்களது புதிய பிரச்சாரம் டாடா ஸ்கை இணைப்பின் முக்கிய அம்சங்களை விளக்குவதுடன், தங்களுக்குப் பிடித்தமான மனத்தில் பதியும் ‘வேற லெவல்’ சொற்றொடர் மூலம் பார்வையாளர்களை இணைக்கிறது. ‘டாடா ஸ்கை இணைப்பு தனது வித்தியாசமான சலுகைகள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களை நிறைவு செய்வதைப்போல் “வேற லெவல்”என்பது உயரிய பொழுதுபோக்கு நிலைக்கு எடுத்துச் செல்வது என்று பொருள்படும்’ என்றார். 

கடுமையான போட்டி நிலவும் கட்டணப் பிரிவுக்கான தீர்வை இந்த விளம்பரப் பிரச்சாரப் படம் விளக்கும். குடும்பம் முழுவதும் பயன்பெறும் வகையில் மிகச் சிறந்த தமிழ்ச் சேனல்கள், நாடகம், திரைப்படங்கள், கிட்ஸ், செய்திகள் மற்றும் விளையாட்டுச் சேனல்களை உள்ளடக்கிய ‘தலைவா’ பேக் கட்டணம் மாதம் ரூ 209/- மட்டுமே ஆகும்.  

23 மில்லியன் சந்தாதாரர்களுடன் முன்னணி டிடிஹெச் நிறுவனமாக விளங்கும் டாடா ஸ்கை நாடு முழுவதுமுள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு உயர்தர சிறப்பான சலுகைகளையும்,வித்தியாசமான வாடிக்கையாளர் சேவைகளையும் வழங்கத் திட்டமிட்டுள்ளது.  

விளம்பரப் பிரச்சாரப் படத்தை இங்கே காணவும் https://youtu.be/HiIeDOSy_iAr