பிப்.18ல் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்துடன் மோதும் விஜய்சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’

பிப்.18ல் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்துடன் மோதும் விஜய்சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’

அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் ‘டான்’. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்து போஸ்ட் புரடெக்‌ஷன் கொடுக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் டான் திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 18-ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

அதேபோல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தையும் பிப்ரவரி 18-ஆம் தேதி வெளியிட தயாரிப்பாளர் லலித்குமார் திட்டமிட்டிருக்கிறார். இதனால் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் திரைப்படம் ஒரே நாளில் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் போட்டியின்றி வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றியடைந்தது. சுமார் நூறு கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அவரின் அடுத்த திரைப்படமான டான், விஜய்சேதுபதி படத்துடன் வெளியாக உள்ளது. எனவே இரண்டு படங்களுக்கும் போட்டி இருக்கும் என கூறப்படுகிறது. இருந்தாலும் இதில் ஒரு படம் சமரசம் செய்யப்பட்டு வேறு தேதியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக திரைத்துறையில் கூறுகின்றனர்.