வேலம்மாள் மாணவர் தமிழக அரசின் குறளோவியம்-ஓவியப் போட்டியில் ரொக்கப் பரிசு வென்றார்.

பத்திரிக்கை செய்தி
15.1.2022.

வேலம்மாள் மாணவர்
தமிழக அரசின் குறளோவியம்-ஓவியப் போட்டியில் ரொக்கப் பரிசு வென்றார்.

திருக்குறளின் மீதான தீராக்காதலின் வெளிப்பாடாக திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு
தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் இணைந்து மாநில அளவில் நடத்திய குறளோவியம் – ஓவியப் போட்டியில் ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் 9-ஆம் வகுப்பு
மாணவன் கீர்த்திவாசன்.பி இரண்டாமிடம் பெற்றார்.
மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற இந்தத் திருக்குறள் ஓவியப் போட்டி 21. 12. 2021 முதல் 31 .12. 2021 வரை நடத்தப்பட்டது.

இதனையொட்டி,
15.01.2022 அன்று
நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற்ற மாணவருக்கு ரூ. 30,000 வழங்கிப் பாராட்டினார்.
மாணவரின் அபார சாதனையைப் பள்ளி நிர்வாகம் பாராட்டி வாழ்த்தியது.