ஜீவா ,நம்ப “சிதம்பரமாக” வந்து அசத்துகிறார்.உற்சாக இளைஞனாக, அருமைத் தம்பியாக, பாசத்திற்கு ஏங்கும்‌ மகனாக, துள்ளல் காதலனாக,பட்டய கிளப்புகிறார்.

எங்க வீட்டு மீனாட்சி

திரைப்பட நடிகர் ஜீவா கதாநாயகனாகவும் , நடிகை ஷிரித்தா கதாநாயகியாகவும் மற்றும் திரைநட்சத்திரங்கள் பூர்ணிமா பாக்யராஜ்,ஆடுகளம் நரேன், பட்டிமன்ற நடுவர் ஞானசம்பந்தம், இயக்குனர் ராஜ் கபூர் மற்றும் பாவா லட்சுமணன் நடிக்கும் “எங்க வீட்டு மீனாட்சி” தொடர் கடந்த 4 மாதங்களாக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் கலர்ஸ் தொலைக்காட்சியில் வெற்றி நடை போட்டுகொண்டு உள்ளது.

ஜீவா ,நம்ப “சிதம்பரமாக” வந்து அசத்துகிறார்.உற்சாக இளைஞனாக, அருமைத் தம்பியாக, பாசத்திற்கு ஏங்கும்‌ மகனாக, துள்ளல் காதலனாக, சமையல்காரனாக, ஆகப்பெரிய நல்லவனாக, யதார்த்தமான தனது இயல்பான நடிப்பில் காமெடி, காதல், சோதனை, ஏக்கம், Sentiment என நவரசத்திலும் பட்டய கிளப்புகிறார்.

ஒரு சில காட்சிகளில் ஜீவா அப்படியே இளவயது “சூப்பர்ஸ்டார் ரஜினியை” கண்முன்னே கொண்டு வருகிறார்.இது ரஜினி ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளதால் அவர்களும் சிதம்பரத்தை கொண்டாடுகின்றனர்.

ஒரு புறம் தன்னுடைய தாயின் அரவணைப்பிற்கு ஏங்கும் சிதம்பரம்‌ தன்னால் பிரிந்த குடும்பத்தை சேர்த்துவைக்க பாடுபடுவதும்…

மற்றோரு புறம் Wedding Plannerஆக இருந்துகொண்டு பல திருமணங்களை நடத்திவைப்பதும்..

பிறகு தனது தொழிலை மேலும் விரிவுபடுத்தும் ஆசையில் சிதம்பரம் வங்கியில் “லோன்” கேட்க,.அதற்கு அவர்கள்‌ எதாவது “டிகிரி”இருந்தால் தான் லோன் தருவோம் என்று கூற..அதற்காக கல்லூரியில் மாணவராக சேர்வதும், அங்கே “டெரர்” Lecturer ஆக இருக்கும்‌ நாயகி மீனாட்சியுடன் காதல்,காமெடி ஊடல், கூடல் என பின்னிபெடல் எடுக்கிறார்.

நம்ம நாயகி மீனாட்சி,சும்மா சொல்ல கூடாது.அப்படி ஒரு லட்சணமான முகம். குடும்பப்பாங்கான தோற்றத்தில் அப்படியே கதையுடன் பொருந்துகிறார்.ஒவ்வொரு இளைஞனுக்கும் தன் வருங்கால மனைவி இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் ஏற்படுகிறது.

ஜீவா, ஷிரித்தா ஜோடிப் பொருத்தம் தான் இந்த கதையில் இளைஞர்களை கவர்கிறது என்றால் அது மிகை இல்லை.இவர்கள் இருவரும் வரும் காட்சிகளில் இளமை ததும்பி,அப்படி காதல் கொப்பளிக்கிறது. இயல்பான நடிப்பில் எனக்கு தெரிந்த வரையில் சின்னத்திரையில் மிக சிறப்பான ஜோடிகள் இவர்கள் இருவரும்.

மேலும் இவர்களின் காதல் காட்சிகள் Instagram, Twitter, FB என சோஷியல் மீடியாக்களில் இளைஞர்களால் கொண்டாடப்பட்டு Viral ஆகி வருகிறது.தினசரி பல” Fans Page” சிதம்பரம் மீனாட்சிக்காக ஆரம்பிக்கப்பட்டு வருகிறது

மீனாட்சி எப்படி சிதம்பரத்தை தன் குடும்பத்தோடு சேர்த்து வைக்கிறார் என்ற போக்கில் தினசரி கதை சென்று கொண்டு உள்ளது.

கடந்த 2021 அக்டோபர் மாதம் ஆரம்பித்த இந்த சீரியல் இதுவரை 70 எபிசோடுக்கு மேல் வெற்றி நடை போட்டுகொண்டுள்ளது.

இதற்க்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பைப் பார்த்து சமீபத்தில் “கலர்ஸ்” தொலைகாட்சி, நடிகர் ஜீவாவிற்க்கு “நம்பிக்கை நட்சத்திரம்”என்ற விருதையும், நடிகை ஷிரித்தாவிற்கு “மக்கள் நாயகி” என்ற விருதையும வழங்கி அவர்களை கவுரவித்தது.

இந்த சீரியல் கலர்ஸ் தொலைகாட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி இரவு 7.30 முதல் 8 மணிவரை ஒளிபரப்பாகிறது.மேலும் “Voot OTT” தளத்தில் எந்த நேரமும் பார்க்கும் வரையில் ஒளிபரப்பாகிறது.

குடும்பங்கள் கொண்டாடும் இந்த சீரியல் அப்படியே ஒரு “காரைக்குடி”
வாழ்க்கையை கண்முன்னே கொண்டு வருகிறது.

தனித்தீவாக ஒவ்வொரு குடும்பங்கள் வாழும் இன்றைய சூழலில் அன்பு ,காதல், பாசம்,விட்டுக்கொடுத்தல், மன்னிப்பு என்ற கூட்டு குடும்பத்தின் அடிநாதங்களின் மகத்துவத்தை எங்க‌வீட்டு மீனாட்சி நிலைநிறுத்துவது ஆகப்பெரும் சிறப்பு.!!

MANY congratulations to the Cast and crew!!
🙏🙏🙏🙏🙏🙏🙏