ரேஞ்சர்’ தரணிதரன்
தமிழ் திரைத்துறையில் தயாரிப்பாளரின் இயக்குநர் என்று பெயர் வாங்கியவர் இயக்குநர் தரணிதரன். தரணிதரன் சரியாகத் திட்டமிட்டு மிகக் குறுக்கிய நாட்களில் படப்பிடிப்பை முடிப்பார் என்று தயாரிப்பாளரின் மத்தியில் நற்பெயர் பெற்றவர்.
சத்யராஜ் மற்றும் சிபிராஜ் வைத்து இவர் இயக்கிய ‘ஜாக்சன் துரை’ அனைத்து குடும்ப ரசிகர்களை மகிழ்வித்ததோடு தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் பெற்று கமர்ஷியல் இயக்குநர் என்ற அடையாளத்தைப் பெற்றவர். தமிழ் ரசிகர்களைச் சிரிக்க வைக்க வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்துடன் எடுக்கப்பட்ட ‘ஜாக்சன் துரை’ குடும்ப ரசிகர்களை மகிழ்வித்ததோடு மட்டுமல்லாமல், அதைத் தயாரித்த நிறுவனம் மற்றும் அதை வெளியிட்ட நிறுவனத்துக்கும் நல்ல லாபத்தைப் பெற்றுத் தந்தது. அதே வேளையில் தரணிதரன் ‘பர்மா’ மற்றும் ‘ராஜா ரங்குஸ்கி’ போன்ற தரமான படங்களை சிறிய முதலீட்டில் எடுத்து சினிமா ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தவர்.
தற்பொழுது நடிகர் சிபி சத்யராஜ் மற்றும் ரம்யா நம்பீசன் வைத்து புலியை மையமாகக் கொண்ட ‘ரேஞ்சர்’ என்ற படத்தை எடுத்து முடித்து உள்ளார். படத்தை பார்த்த தயாரிப்பாளர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் படத்தின் கரு மற்றும் அதன் தொழில்நுட்பம் குறித்து தரணிதரனை பாராட்டி வருகிறார்கள். இதன் சிறப்பு அம்சம், சிறிய முதலீட்டில் புலியை கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் Hollywood தரத்தில் இயக்குநர் தரணிதரன் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. ‘ரேஞ்சர்’ படத்தின் புலியின் கிராபிக்ஸ் இந்திய அளவில் பேசப்படும் என்று தரணிதரன் உறுதிப்பட நம்புகிறார்.
இந்த புதிய ஆண்டிலும் பல சுவாரசியமான படைப்புகளைக் கொடுக்க உள்ளார். அந்த வகையில் தயாரிப்பாளரின் இயக்குநராக வலம் வரும் தரணிதரன் விரைவில் தன்னுடைய புதிய படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.