FIR
திரைப்பட விமர்சனம்
கதை
————
இர்பான் அகமத் என்ற ரசாயன வேதியல் பட்டப் படிப்பு பயின்ற இளைஞன் வேலை தேடி அலைகிறார்
அவருக்கு ஒரு கெமிக்கல் கம்பெனியில் வேலை கிடைக்கிறது தனது நிறுவனத்தின் சார்பாக ரசாயன மருந்துகளை கோயமுத்தூரிலிருந்து ஹைதராபாத்துக்கு கொண்டு செல்லும் பொறுப்பு அவருக்கு வழங்கப்படுகிறது அதை அவர் செய்யும் அந்த நேரத்தில் இலங்கையியிலும் ஹைதராபாத்திலும் ஒரே நேரத்தில் வெடி விபத்து நடக்கிறது விபத்து நடந்த இடத்தில் இர்பான் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்படுகிறார் அவர்களை சமாளித்து விட்டு சென்னை வந்தவரை இன்டர்நேஷனல் தீவிரவாதி என்று வலுக்கட்டாயமாக கைது செய்கிறார்கள்
அவரிடம் உண்மையை வரவழைக்க காவல்துறையினர் இர்ப்பானை சித்திரவதை செய்கிறார்கள் இதில் தன் தாயை இழக்கிறார்
செய்யாத குற்றத்திற்கு தான் தேசத் துரோகியாக சித்தரிக்கப்பட்டுகொடூர கொடுமைகளை அனுபவிப்பதை சகித்துக் கொள்ள முடியாமல் காவல்துறையிடமிருந்து தப்பித்து தான் நிரபராதி என்று எப்படி நிரூபிக்கிறார் என்பதே இப்படத்தின் கதை!
இர்பான் என்னும் பெயருடன் நடுத்தர வர்க்கத்து குடும்ப இளைஞனாக விஷ்ணு விஷால் மிகக் கச்சிதமாக நடித்துள்ளார் தன் தாயை கவனித்து கொள்வதிலும் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதிலும் மஞ்சிமா மோகனிடம் எதார்த்தமாக பழகுவதிலும் இயல்பான நடிப்பை இவ்வாறு வழங்கியவர் தன்னை தீவிரவாதி என்று காவல்துறையினர்கைது செய்து அவர்களால் சித்திரவதையை அனுபவிக்கும் பொழுது அவருடன் சேர்ந்து நாமும் அனுபவிப்பதைப் போன்ற உணர்வை அழகான நடிப்பால் வெளிப்படுத்தியுள்ளார்
தனது தாய் போனில் பேசியபடியே இறக்கும்போது பொழுது கல் மனதையும் கரைய வைத்தது விஷ்ணு விஷாலின் உருக்கமான நடிப்பு தன் தாய் இறந்த பின் பொங்கி எழுந்து எதிரிகளை வேட்டையாடும் சண்டைக்காட்சிகளில் இவரின் கம்பீரம் மெய்சிலிர்க்க வைக்கிறது
பல வெற்றிப் படங்களை நிர்ணயித்த இரண்டு கிளைமாக்ஸ் இப்படத்திலும் அமைந்துள்ளது வெகு சிறப்பு அதில் இரண்டாம் கிளைமாக்ஸ் யாராலும் யோசிக்க முடியாத ஒன்று ஆங்கிலப் படத்தைப் பார்த்த உணர்வை ஏற்படுத்தியுள்ளது
நாயகன் விஷ்ணு விஷாலை காப்பாற்ற யாராவது வரமாட்டார்களா என்ற உணர்வை நாயகியாக நடித்த மஞ்சிமா மோகன் மிகக் கச்சிதமாக எதார்த்தமாக நடித்துள்ளார் பிராமணப் பெண்ணாக அழகாக ஆரம்பக் காட்சிகளில் வந்து விஷ்ணுவிஷாலை மயக்கிய ரிபோ மோனிகா கிளைமாக்ஸில் ஆங்கிலப் பட கதாநாயகிகளை மிஞ்சும் வண்ணம் சண்டைக்காட்சிகள் நடித்து நம்மை வியக்க வைக்கிறார்
புதிய இயக்குனர் மனு ஆனந்த் அதி புத்திசாலித்தனத்தையும் மிக அற்புதமான தொழில் நுட்பத்தையும் திரில்லிங்குடன் இப்படத்தை நடத்திச் சென்றிருக்கிறார் ஆங்கிலப் படங்களுக்கு இணையாக வென்றிருக்கிறார் அவருக்கும் விருவிருப்பான திருப்பங்களைக் கொண்ட சம்பங்களை படமாக்கிய ஒளிப்பதிவாளர் வின்சென்ட் அவர்களுக்கும் பரபரப்பான நொடிகளை கடக்கும் காட்சிகளுக்கு நம்மையும் அழைத்துச் சென்ற இசையமைப்பாளர் அஸ்வந்த் ஆகியோருக்கும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இடம் உண்டு கொரானா காலகட்ட இடைவெளியில் இப்படத்தை எடுத்து வென்றமைக்காக படக்குழுவினர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்களே!
மொத்தத்தில் இந்தFIR national fire 💪💪💪💪💪💪💪💪💪
— விக்ராந்த் பிரபாகரன்