அஷ்டகர்மா
(திரை விமர்சனம் )
கதை
———–
தனது ஒரே மகளை பெரிய பணக்காரனுக்கு திருமணம் செய்து வைக்கும் மந்திரவாதி தனது மருமகன் தன் மகளை விட அவரது தங்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை அறிந்து வேதனைப்படுகிறான் தனது மகளுக்கு குழந்தை பாக்கியம் இல்லாத சூழ்நிலையில் தனது மருமகனின் தங்கைக்கு இரண்டு குழந்தைகள் என்று இருப்பதை கண்டு தனது ஒரே மகள் கலங்குவதை கண்டு துடிக்கும் மந்திரவாதி
தனது மகளின் விருப்பபடி அவளது கணவரின் சொத்துக்களை அவரது தங்கைக்கு கொடுத்து விடுவார் என்ற பயத்திலும் சுய நலத்திலும் அவர்கள் குடும்பமும் அழிந்துபோக தனது தந்தையின் மூலம் கொடூர செய்வினையை செய்து வீட்டில் வைக்கிறார் இதன் மூலம் அவளின் கணவர்மட்டுமன்றி அவரது தங்கை தங்கையின் கணவர் ஒரு குழந்தை என்று அனைவரும் இறக்கிறார்கள்
அன்று முதல் அந்த வீடு ஒரு துஷ்ட சக்தி இருக்கும் வீடாக கருதப்படுகிறது
இதனைப் பற்றிய ஆய்வு செய்ய வரும் கதாநாயகன் சிஎஸ் கிசன் நந்தினி ராயுடன் சென்று அங்குள்ள பிரச்சனைகளை கண்டுபிடித்து எப்படி அந்த வீட்டை காப்பாற்றுகிறார் என்பதே இப்படத்தின் கதை
வழக்கமான பேய் படங்களிலிருந்து மாறுபட்ட திகில் படமாகவும் ரிக் யசூர் சாம அதர்வண வேதங்களில் இதில் நான்காவது வேதமான அதர்வண வேதத்தில் உள்ள அஸ்வ கர்மா என்ற செய்வினையை மையப்படுத்தி அற்புதமாக திரை வடிவத்தில் கொண்டு வந்து நம்மை வியக்க வைத்த இயக்குனர் விஜய் தமிழ்ச்செல்வன் இயக்கத்தில் புதியவர் என்று தோன்றவில்லை அந்த அளவுக்கு அற்புதமாக படமாக்கி உள்ளார் கதைக்களத்துடனும் கதாபாத்திரங்களுடனும் நம்மையும் பயணிக்க வைத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர்
நாயகன் கிஷனுடன் ஆராய்ச்சி செய்ய வந்த நந்தினி ராயின் நடிப்பும் அழகும் நம்மை கவர்ந்தாலும் க்ளைமாக்ஸில் அவர் பைத்தியம் பிடித்ததை போல் சிரித்தது நமக்கு அச்சத்தை உண்டாக்குகிறது அவரின் நடிப்பு
மற்றொரு கதாநாயகியான ஸ்ரீதா சிவதாஸ் தன் மகனின் ஓவியத் திறமை கண்டு பயப்பட்டு அழுவதிலும் தன் கணவனையும் மகனையும் இழந்து மூக்கில் நீர் வடிய கலங்கி கதறி அழும் காட்சியிலும் ஸ்ரீதா சிவதாசின் நடிப்பு வியக்கவைக்கிறது க்ளைமாக்ஸில் இத்தனை நாள் தனது அம்மா யார் என்று தெரியாமல் வளர்ந்து விட்டோமே என்று அழும் போதும் அவரின் தாய்மை பாச நடிப்பு மிக அற்புதம்
Rb குருதேவ் அவர்களின் பரபரப்பான ஒளிப்பதிவும் நெஞ்சை பதற வைக்கும் இசையை படைத்த Lv முத்து கணேஷின் அபார இசையும் படத்தை பார்க்க வைக்கின்றது
மொத்தத்தில் அஷ்டகர்மா விரைவில் இரண்டாம் பாகம் வருமா என்று ஏங்க வைக்கிறது
👌👌👌👌👌👌👌👌👌👌
——- விக்ராந்த் பிரபாகரன்