“செல்ஃபி” திரைபட விமர்சனம்

இயக்குனர் மதி மாறனின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன் என்டர்டெய்னர் படம் ‘செல்ஃபி’. ஜி.வி. பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா மற்றும் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு வழங்க, டி.சபரீஷ் தயாரித்துள்ளார். குணாநிதி, வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை வித்யா ஆகியோர் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். மக்கள் தொடர்பு குமரேசன்.

தமிழ் சினிமாவில் இதுவரை எவராலும் சொல்லப்படாத கதை. இன்ஜினியரிங் & மருத்துவக் கல்லூரிகளில் ‘மேனேஜ்மென்ட் சீட்’ என்ற காலி இடங்களுக்காக தரகர்கள் முதல் படத்தின் கதை.

கதைக்களம்..

வாகை சந்திரசேகர் கட்டளைப்படி கட்டாயத்தின் பெயரில் ஊரிலிருந்து சென்னைக்கு வந்து இன்ஜினீயரிங் படிக்கிறார் நாயகன் ஜிவி. பிரகாஷ்.

சில நேரம் கல்லூரி கட்டணம் கட்டவே அவஸ்தைப்படுகிறார். எனவே பார்ட் டைம் ஜாப் போக சொல்கிறார் அப்பா சந்திரசேகர்.

எனவே உடனே பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, கல்லூரியில் மாணவர்களை சேர்த்துவிடும் புரோக்கர் வேலை பார்க்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

ஒரு சீட்டுக்கு இவ்வளவு என நிர்ணயித்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்.

சக மாணவன் ஒருவனின் ஊரில் இருந்து வந்திருக்கும் ஒரு கந்து வட்டிக்காரரின் மகனுக்கு மெடிக்கல் காலேஜில் சீட் வாங்கித் தரும் முயற்சியில் இறங்குகிறார் ஜி.வி. அதே கல்லூரியில் ஏற்கெனவே  முன்னாள் இன்ஜினியரிங் ஸ்டூடண்ட் கவுதம் வாசுதேவ் மேனன் இதே வேலையைச் செய்து வருகிறார். அந்த மருத்துவக் கல்லூரியின் உரிமையாளரான சங்கிலி முருகனின் சொந்த மருமகன் அந்தக் கல்லூரியை நிர்வாகம் செய்து வருகிறார். ஆனால் மருமகனுக்கும், கவுதம் மேனனுக்கும் ஆகாது.

ஒரு கட்டத்தில் நண்பர்களால் பெரிய லாபத்திற்கு ஆசைப்பட்டு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் ஜி.வி.பிரகாஷ். இந்த பிரச்னை கௌதம் மேன்னுக்கு தெரிய வருகிறது.

ஜிவி. பிரகாஷை என்ன செய்தார் கௌதம் மேனன்.? சிக்கலில் இருந்து விடுபட்டாரா நாயகன் ஜிவி ? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஜி.வி.க்கு சரியான பொருத்தமான  கேரக்டர். கல்லூரி மாணவன் கனலாக, அனல் பறக்கும்வசனங்களைப் அள்ளி வீசியுள்ளார் அந்த கதாபாத்திரங்களகாக வாழ்ந்து இருகிறார்  நடித்திருக்கிறார்.

தனது  அப்பாவான வாகை சந்திரசேகரிடம் உண்மை தெரியாமல் அவரை பற்றி தவறாக புரிந்து கொண்டு பின்பு உண்மை தெரிந்தும் அவரிடத்தில் மன்னிப்புக் கேட்கும் காட்சியில் நம்மையும் கண்கலங்க வைத்திருக்கிறார் அந்த காட்சி மனதில் நிற்கிறது.

 இறந்து போன நண்பனின் தாய்யிடம் கண் கலங்கிப் போய் நின்று மன்னிப்பு கேட்கும்போதும் அருமை சபாஷ் போடலாம்! ஜீ.வி. தொடர்ந்து இது போன்று தனக்குப் பொருத்தமான கதாபாத்திரத்தில் நடிப்பதுதான் நல்லது.

ஜிவி பிரகாஷிற்க்கு ஜோடியாக வரும் வர்ஷா பொல்லாம விற்க்கு கதையில் அதிகம் முக்கியத்துவம் இல்லை என்றாலும் தனக்கு கொடுத்த கதாபாத்திரைத்தை சிறப்பாக சரியாக செய்து கொடுத்துள்ளார் ஜிவிபிரகாஷின் நண்பனாக வரும் டி.ஜி. குணாநிதி. அறிமுக நடிகர் என்றாலும் முதல் படம் தன் முத்திரை பதித்துள்ளார்.
இன்ஜினியரிங், மற்றும் மெடிகல் காலேஜ்ல் படிப்பதற்க்கா மாணவர்களை சேர்பதற்க்கும் இடம் வாங்கி தரும் தரகராக ரவிவர்மா நடித்திருக்கும் கவுதம்மேனன் அசத்தலான அனுபவ மிக்க நடிப்பு அசத்தி உள்ளார். அமைதியாக எந்த ஆர்ப்பாட்டம் இல்லாமல் சிறப்பாக நடித்திருக்கும் கல்லூரி அதிபராக ஈஸ்வரமூர்த்தி கதாபாத்திரத்தில் சங்கிலிமுருகன் சரியான தேர்வு அசத்தி இருக்கிறார். நாயகனுக்கு தந்தையாக வாழ்ந்து இருக்கும் வாகை சந்திரசேகர் பாராட்டு

இன்ஜினியரிங் மற்றும் மெடிக்கல் காலேஜில் படிப்பதற்க்காக மாணவர்களை சேர்ப்பதற்கு காலேஜிகுள் நடக்கும்  பல பெரிய  மோசடியில்  பணம் வசூல் வேட்டையும், அதை சார்ந்து இருக்கும் புரோக்கர்களை பற்றியும் மிகச் சிறந்த முறையில் தெள்ள தெளிவாக  தமிழ் சினிமாவில் இதுவரை வெளி வராத ஒரு கதையை தேர்வு செய்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் மதிமாறன் தைரியமாக சொல்லியிருக்கும் மதி மாறனுக்கு அவர்களுக்கு பாராட்டு வாழ்த்துக்கள். சமுதாயத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்த கதை  ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்கி இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. சொல்லஅந்த விஷயத்தை அழகா ஆழமாகவும் அருமையாக சொல்லியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் கேட்க்கும் படியாக உள்ளது மனதில் நிற்கவில்லை  என்றாலும் பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் கைகொடுத்திருக்கிறது. விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப காட்சி படம் பிடித்து கொடுத்துள்ளார் சூப்பர்  .இதில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் பாராட்டு..

மொத்தத்தில் ‘செல்ஃபி’படம் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கும் இவர்களின் தாய் தந்தை  கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.