சர்வதேச சதுரங்கப்
போட்டியில் வேலம்மாள் பள்ளி
மாணவன் சாதனை .
அண்மையில்
ஏப்ரல் 17- 2022 அன்று ஸ்பெயின் நாட்டில் உள்ள ‘லா ரோடாவில் ‘ சர்வதேச அளவிலான 48 வது
ஓபன் அஜெட் ரஸ்
சதுரங்கப் போட்டி
நடைபெற்றது.
உலகின் பல்வேறு
நாடுகளில் இருந்து
193 சதுரங்கப் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் மேல் அயனம்பாக்கம்
வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் பயிலும்
10-ஆம் வகுப்பு மாணவன் கிராண்ட்
மாஸ்டர் டி.குகேஷ்
கலந்து கொண்டு
தனது தனித்திறமையை
வெளிப்படுத்தி
முதல் ஓபன் பட்டத்தை வென்றுள்ளார்.
மேலும் இவர் 7.0 புள்ளிகளுடன் பல்வேறு
சுற்றுகளில் வெற்றி
பெற்று இறுதிச் சுற்றில் களமிரங்கி
இஸ்ரேலிய சதுரங்க வீரர் GM விக்டர் மிகலெவ்ஸ்கியை
தோற்கடித்து 8 புள்ளிகளுடன் இறுதிப் போட்டியில்
9 சுற்றுகளில் ஆட்டமிழக்காமல்
முதலிடம் பிடித்தார்.
இதனால் இவர்
ELO மதிப்பீடு 2637
உடன் உலகின் முதல் 100 தரவரிசைப் பட்டியலில் நுழைவது உறுதி என்று இந்திய சதுரங்க வீரர் திரு.
விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள்
தனது வலைப்பதிவில்
குகேஷின் சாதனையைப் பாராட்டி வாழ்த்து
தெரிவித்துள்ளார்.
குகேஷின் சானைக்குப் பள்ளி
நிர்வாகம் மற்றும்
ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து
தெரிவித்துள்ளனர்.