குழந்தைக் கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘துணிகரம் ‘மே 6 முதல்,,,

குழந்தைக் கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘துணிகரம் ‘மே 6 முதல்,,,

இயக்குநர் மிஷ்கினின் பாணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ துணிகரம்’ மே 6ஆம் தேதி உலகெங்கும்,,

,சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோருக்கு விழிப்புணர்வூட்டும் படம் ‘துணிகரம்’!

நல்ல கதையம்சம் கொண்ட படங்களை வெளியிடும் ஆக்சன் – ரியாக்சன் ஜெனிஷ்யின்  அடுத்த வெளியீடு ” துணிகரம்”.

தமிழ்ச் சினிமாவில் எத்தனையோ கடத்தல் கதைகள் கூறப்பட்டுள்ளன. சில கடத்தல் சம்பவங்கள் நெஞ்சை உலுக்கும் . கடத்தல்காரர்களின் கொடூர செயல்கள் எப்படி எல்லாம் இருக்கும் என்பதை இப்படத்தில் தோலுரித்துக் காட்டியுள்ளார் இயக்குனர் பாலசுதன்.

குழந்தைக் கடத்தல்  பின்னால் உள்ள கடத்தல் கும்பல்களின் துணிகரமான செயல்களும் அவர்களின் நெட்வொர்க்கும்  எப்படிப்பட்டது என்று பல படங்களில் நாம் பார்த்திருக்கிறோம்.

புதிதாக உருவாகியுள்ள ‘துணிகரம்’ படத்தில் குழந்தைக் கடத்தல் கும்பல்களைப் பற்றி விரிவாகக் காட்டப்பட்டுள்ளது.

ஒரு தம்பதி மிக மிக  அவசரமாக மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். அந்த வாகனத்துக்குள் திடீரென்று ஒரு  குழந்தைக் கடத்தல் கும்பல் ஏறிக் கொள்கிறது. அவர்கள் கண்ணெதிரே குழந்தை கடத்தப் பட்டு இருப்பதை அறிகிறார்கள். அவர்கள் அவசரமாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியும் இருக்கிறது. அவர்கள் தாங்கள் புறப்பட்ட படி மருத்துவமனைக்குச் சென்றார்களா? கடத்தப்பட்ட குழந்தை மீட்புக்கு ஏதாவது உதவி செய்தார்களா?  என்பதே படத்தின் கதை.

இப்படி ஒரு குழந்தையின் கடத்தலைச் சுற்றிப் பயணிக்கின்ற திரைக்கதையே முழுப் படமாகி உள்ளது.

இப்படத்தை “ஏ4  மீடியா ஒர்க்ஸ் ” சார்பில் டாக்டர். வீரபாண்டியன் மற்றும்  டாக்டர் .டெய்சி வீரபாண்டியன் தயாரித்துள்ளனர் . முழுக்க முழுக்க பரபரப்பான  சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இது உருவாகி உள்ளது.

இயக்குநர் மிஷ்கினின் பாணியில்  இந்த திரைப்படத்தை உருவாக்கி இருப்பதாக திரைக்கதை எழுதி இயக்கியுள்ள இயக்குநர் பாலசுதன் கூறுகிறார்.

இப்படத்தின் கதையை டினோ எழுதியுள்ளார்.
படத்திற்கு ஒளிப்பதிவு- மெய்யேந்திரன் கெம்புராஜ்,  இசை – பி.ஷான் கோகுல்,
பாடல்கள் -கு. கார்த்திக், பி..ஷான் கோகுல்
,நடனம்- ராஜு , படத்தொகுப்பு – என். பிரகாஷ்.

“விறுவிறுப்பான த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் துணிகரம் படத்தின் இரண்டாவது பாதியின்  கதை முழுக்க ஒரு ஆம்புலன்சில் பயணிக்கிறது. விரைவாக ஓடும் ஆம்புலன்சுடன் கதையும் பரபரப்பாக ஓடுகிறது. இது ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கும். இப்படம் குழந்தையை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கும் இளம் தம்பதியினருக்கும் மறக்க முடியாத படமாகவும் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி ?அவர்களுக்கு எந்த வகையில் எல்லாம் ஆபத்துக்கள் வரும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய படமாகவும் இருக்கும்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இயக்குநர் பாலசுதன்.

‘துணிகரம் ‘ திரைப்படத்தை மே 6ஆம் தேதி உலகெங்கும் ஆக்சன் – ரியாக்சன் ஜெனிஷ் வெளியிடுகிறார்.

The first Indian “In-Ambulance survival thriller” movie #Thunikaram

மே 6️⃣ முதல்  திரையரங்குகளில்…,