“விசித்திரன் “திரைப்பட விமர்சனம்

விசித்திரன் திரைப்பட விமர்சனம்)

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஜேம்ஸ் என்ற பெயரில் மலையாளத்தில் வெளிவந்த வெற்றி திரைப்படம் தான் தமிழில் விசித்திரனாய் நம்மை மகிழ்விக்க வந்திருக்கிறது

கதைச்சுருக்கம்
—————————–

காவல்துறையில்
ஓய்வுபெற்ற சமூக அக்கறையும் பொறுப்பும் உள்ள மாயன் என்பவர் காவல்துறைக்கு மறைமுகமாக குற்றவாளிகளை கண்டுபிடித்து தரும் பணியை செய்து வருகிறார்
இந் நிலையில் தன் மகளின் சாலைவிபத்து மரணமும் தனது முன்னாள் மனைவியின் சாலைவிபத்து மரணமும் மாயனுக்கு சந்தேகத்தை வரவழைக்கிறது அத்துடன் அவர்களின் இறப்பிற்குப் பின்பு அவர்களால் தானம் செய்யப்பட்ட உடல் உறுப்பு மாற்றம் குறித்தும் அவருக்கு சந்தேகம் எழுகிறது அதை தனது மதிநுட்ப அறிவினால் கண்டுபிடிக்கிறார் அந்தக் கண்டுபிடிப்பை உலகம் அறிய வேண்டுமானால் தான் உயிரை விட வேண்டும் என்பதை உணர்ந்து தன் உயிரைக் கொடுத்து மருத்துவமனையில் நடக்கும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மறுபக்கத்தை நீதிமன்றத்தின் மூலம் எடுத்துரைத்து மக்களுக்கு ஒரு பாடம் ஆகிறார் இதுதான் இத் திரைப்படத்தின் கதைச் சுருக்கம்

இந்தப் புதிய கதையில் நாயகனாக ஆர்கே சுரேஷ் அவர்களின் ஒப்பற்ற மெனக்கெடல் நடிப்பு வியக்கவைக்கிறது அலட்டல் இல்லாத மெதுவாக பேசும் கட்டைக் குரல் கான்டாக்ட் லென்ஸ் அணிந்த சிவந்தகண்கள் எப்போதும் பீடி குடித்து பேசும் நடிப்பு மதுவை அருந்தி போதையுடன் லேசான தள்ளாட்டத்துடன் மெதுவாக நடந்தபடி பேசும் பேச்சு நடிப்பு என்று நடிப்பில் புதிய பொலிவினை ஆர்கே சுரேஷ் வழங்கி வியக்க வைத்திருக்கிறார் அவரின் எதார்த்த நடிப்புக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள் !

சில காட்சிகளிலேயே வந்தாலும் பூர்ணா ஒப்பனை இல்லாத முகத்தோற்றத்தில் நடுத்தர குடும்பப் பெண்ணின் மன உணர்வையும் கணவரின் வெறுப்புக்கு ஆளான பிள்ளையைப் பெற்ற பெண்ணின் உணர்வுகளையும் நடிப்பால் மிக அற்புதமாக வெளிப்படுத்தி நமது மனதில் ஒட்டிக் கொள்கிறார்

ஜிவி பிரகாஷ் குமாரின் தரமான பின்னணி இசையும் அற்புதமான உணர்வுடன் கூடிய மாண்டேஜ் பாடல்களும் படத்திற்கு பலத்தை சேர்க்கின்றன

தமிழில் ஜெய் பீம் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு எதார்த்தமான திரைப்படமாக இத்திரைப்படத்தை சொல்லலாம் கதைக் களமும் காட்சியும் மெல்லமாக நகரும் இத்திரைப்படம் அனைவரையும் கவரும் கவரவேண்டும் என்று இயக்குனர் பத்மகுமார் தரமாக இயக்கியிருக்கிறார்

விசித்திரன்

அனைவரும் ஏற்கக்கூடிய கட்டாயம் அனைவரும் பார்க்கக்கூடிய விண்ணப்ப சித்திரன்

— விக்ராந்த் பிரபாகரன்