முதலமைச்சரின் விரிவான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 6 முதல் 66 வயதுடைய 125 நபர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு சாதனை

முதலமைச்சரின் விரிவான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 6 முதல் 66 வயதுடைய 125 நபர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு சாதனை படைத்த தனியார் மருத்துவமனைக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் (குளோபல் எல்த் சிட்டி) மருத்துவமனையில் கொரோனா தொற்று காலத்தில் 125 நபர்களுக்கு
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர்.

6 மாதக் குழந்தை முதல் 66 வயது முதியவர் என சுமார் 125 நோயாளிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் (TNCMCHIS) 125 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை வெற்றிகரமாகச் செய்துள்ளது.

தமிழக அரசுக்கு சிசிக்கை பெற்றவர்கள் நன்றி சொல்லும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.ஐஏஎஸ், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்ரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

மேடையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 125 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் குழுவிற்கு தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் 110 அறிவிப்பு என்றால் அந்த ஒரு நாளைக்கு பரபரப்பு.
அதிமுக ஆட்சியில் 110 அறிவித்தால் அது 111 (நாமம்) ஆகதான் மாறும்.
இன்று 110ல் அறிவித்தால் அது நடைமுறைக்கு வரும், செயல்பாட்டிற்கு வரும், மக்களுக்கு பலனளிக்கும் என்றார்.

புதிதாக திருத்தி அமைக்கப்பட்ட முதல்வர் காப்பீடு திட்டத்தில் 8 சிறப்பு பிரிவுகள் என 1090 வகையான சிகிச்சைகள் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்காக 5 ஆண்டுகாலம் அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு 1289 கோடியே 29 லட்சம் செலவில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது.
கடந்த ஜனவரி 10ம் தேதி புதுப்பிக்கப்பட்ட இந்த திட்டத்தில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி வரை 11,577 பேர் பயன்பெற்றுள்ளனர். இவர்களுக்கு 929 கோடியே 91 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

என்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் கடந்த டிசம்ப மாதம் துவங்கி இன்றுவரை 58,940 பேர் விபத்துகளில் சிக்கி பயன்பெற்றுள்ளனர். இவர்களுக்காக 52 கோடியே 62 லட்சத்து 84 ஆயிரத்து 993 ரூபாய் என சுமார் 53 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்காக தமிழக அரசு ஒதுக்கிட்டுள்ளது. இதில் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் இந்த திட்டம் இந்தியாவில் மட்டுமல்ல உலகத்திலேயே தமிழகத்தை தவிர வேறு எங்கும் இல்லை என்று புகழாரம் சூடினார்.

தமிழக முதல்வர் அவர்கள் ஓரே நேரத்தில் தமிழகம் முழுவதும் 709 மருத்துவமனைகளை கட்டுவதற்கு
180 கோடியே 40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து இந்த திட்டத்தை அறிவித்துள்ளார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்