“டேக் டைவர்ஷன்” விமர்சனம்:
சிவானி பிலிம்ஸ் சார்பில் சுபா செந்தில் மற்றும் நண்பர்களுடன் இணைந்து தயாரித்திருக்கும் டேக் டைவர்ஷன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சிவானி செந்தில்.
இதில் சிவக்குமார், பாடினி குமார், காயத்ரி, ஜான் விஜய், ராம்ஸ், விஜய்டிவி புகழ் ஜார்ஜ் விஜய், பாலா ஜெ சந்திரன், சீனிவாசன் அருணாச்சலம் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை – ஜோஸ் பிராங்க்ளின், ஒளிப்பதிவு – ஈஸ்வரன் தங்கவேல், படத்தொகுப்பு – விது ஜீவா, நடனம்-சாண்டி,பாடல்கள்-மோகன் ராஜன், பிஆர்ஒ-சக்தி சரவணன்.
இருபத்தி ஆறு வயதில் தொடங்கும் பெண் தேடும் படலம் முப்பது வயது ஆகும் வரை தொடர்ந்து கொண்டிருக்க, சிவக்குமாரின் அண்ணன் வற்புறுத்தலால், முதலில் பார்த்த பெண் காயத்ரியையே திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். இந்த சமயத்தில் வேலை பறி போகும் சூழலில் மாட்டிக் கொள்ளும் சிவக்குமார், தன் மனேஜர் ஜான் விஜய்யிடம் திருமண நிச்சயம் நடக்கும் நேரத்தில் வேலை பறி போகாமல் காப்பாற்றும்படி கேட்டுக் கொள்கிறார். இதற்கு ஜான் விஜய் பாடினி குமார் என்ற பெண்ணை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி வந்தால் வேலை நிரந்தரம் செய்கிறேன் என்று சொல்ல, வேறு வழியில்லாமல் பாடினி குமாரை தேடிப் போகிறார் சிவக்குமார். அங்கே பாடினிகுமார் அந்தப் பெண் 70 கிட்ஸ் தாதா ஒருவனின் ( ராம்ஸ் ) பிடியில் இருப்பது தெரிகிறது . அதன் பின் நடக்கும் சம்பவங்களே டேக் டைவர்சன் அந்த இடத்திலிருந்து தாதா ராம்ஸ்சை ஏமாற்றி பாடினி குமாரை காரில் சிவக்குமார் அழைத்துச் செல்கிறார். சிவக்குமாரின் காரில் நண்பரும், பாடினி குமாரும் பயணிக்க, வழியில் காயத்ரியையும் அழைத்துச் செல்லும் சூழல் ஏற்படுகிறது. அனைவரும் பாண்டிச்சேரிக்கு பயணிக்கும் நேரத்தில், தாதா ராம்ஸ் தன் அடியாட்களுடன் காரில் பின் தொடர்கிறார். இறுதியில் சிவக்குமார் பாண்டிச்சேரியில் பாடினி குமாரை கொண்டு சேர்த்தாரா? சிவக்குமாருக்கும் காயத்ரிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததா? தாதா ராம்ஸ்சிற்கு பாடினி குமாரை கிடைத்ததாரா? தாதா, மேனேஜர், காதலன் இவர்களிடமிருந்து பாடினி குமார் தப்பித்தாரா? என்பதே க்ளைமேக்ஸ்.
எதார்த்தமான நடிப்பு கதை நாயகனாக சிவக்குமார் சரியான பொருத்தம், நாயகிகளாக பாடினி குமார் சின்னத்திரையிருந்த பெரிய திரைக்குப் வந்துயிருக்கிறார், நாயகனுக்கு ஏற்ற நாயகி மற்றும் காயதிரி நடித்திருக்கிறார் வில்லனாக ஜான் விஜய், காதல் தாதாவாக ராம்ஸ், விஜய் டிவி புகழ் ஜார்ஜ் விஜய், பாலா ஜெ சந்திரன், சீனிவாசன் அருணாச்சலம் ஆகிய மற்ற உடன் நடித்த அனைவரும் கதாபாத்திரங்களும் தேவையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர் படத்திற்கு பக்கபலமாக வலு சேர்க்கிறார்கள்.
தேவா பாடிய மஸ்தானா மாஸ் மைனரு என்கிற கானா பாடலும், சாண்டி நடனம் அமைத்துள்ள யாரும் எனக்கில்லை ஏனடி? என்கிற காதல் பாடலும் ஜோஸ் பிராங்க்ளின் இசையில் கேட்கும் படியாக இருந்தது .
ஈஸ்வரன் தங்கவேல் ஒளிப்பதிவு சென்னை மற்றும் பாண்டிச்சேரி (ECR )பயணமும், சேசிங் காட்சிக்கோணங்களை சூப்பராக கொடுத்துள்ளனர்.
படத்தொகுப்பு – விது ஜீவா, நடனம்-சாண்டி சிறப்பு.
பல வருடங்களாக கடன் பிரச்னையால் தவிக்கும் பெண்ணை அவள் வேலை பார்க்கும் கம்பெனி மேனேஜர் முதல் அவள் வசிக்கும் பகுதியில் ரவுடி ததாக்கள் அவளை அடைய துரத்த ஒரே நாளில் சென்னையிலிருந்து பாண்டிச்சேரி அழைத்து வந்து அந்த கடனிலிருந்து காப்பாற்றி பாதுகாப்பாக மீட்கும் இளைஞன் என்ற கதைக்களத்துடன் இயக்கியுள்ளார் சிவானி செந்தில். ஒரே திசையில் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை திருப்பத்துடன் வேறு திசையில் பயணித்தாலும் சென்றடைவது அதுவே பயணித்தவன் வாழ்க்கை அமையும்
கதை புதியது சொல்ல வந்ததை தடுமாற்றம் ‘எடுத்த முயற்ச்சி என்பதை தன்னால் முடிந்த வரை சிறப்புடன் கொடுக்க முயற்சி செய்துள்ளார் இயக்குனர் சிவானி செந்தில். ( அடுத்த படத்திற்க்கு கதை விவாதம் அனுபவ உள்ளவர்களுடன் சரி செய்து கொள்ளவும்)
மொத்தத்தில் டேக் டைவர்ஷன் பல திருப்பங்களுடன் முடியும் பயணம்