கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பில் திருச்சி *ஓமாந்தூர் அரசு மருத்துவமனை* யில் நலத்திட்ட விழா *23-05-2022* அன்று நடந்தது.

*கற்பக விருட்சம் அறக்கட்டளை – மருத்துவ சேவை – 2022 (1)*

கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பில் திருச்சி *ஓமாந்தூர் அரசு மருத்துவமனை* யில் நலத்திட்ட விழா *23-05-2022* அன்று நடந்தது.

விழாவிற்கு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் *திரு.கண்ணன்* தலைமை தாங்கினார்.

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி செயலர் *திரு.பாலசுப்ரமணியன்* சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அறக்கட்டளையின் பணிகளை பாராட்டி பேசினார்.

விழாவில் மருத்துவமனைக்கு *பீரோ, மருத்துவ உபகரணங்கள் (இரத்த அழுத்தம் பார்க்கும் கருவிகள், எடை பார்க்கும் எந்திரம்), தூய்மை பணியாளர்களின் கொரோனா கால சேவையை பாராட்டி (அரிசி/மளிகை நிவாரணம்)* போன்றவை *₹25,000* மதிப்பில் வழங்கப்பட்டது.

நிதி உதவி செய்த நன்கொடையாளர்கள் *திருமதி.சங்கீதா*, *திரு.ராம்பிரசாத்* மற்றும் *திருமதி.மலர் சங்கரநாராயணன்* ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.

நிகழ்ச்சியின் தொகுப்பை காணொளியில் பாருங்கள் & நீங்களும் உதவுங்கள்.

*KarpagaVirutchamTrust* You Tube சேனலை சப்ஸ்கிரைப் செய்து, Bell icon கிளிக் செய்யுங்கள்.

அறம் செய்ய பழகு!