ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஷமக்காரன் படத்தை தயாரித்து எழுதி இயக்கியிருக்கிறார் வி (விஜய் குப்புசாமி).இவருடன் அனிகா விக்ரமன் மற்றும் சைத்ரா ரெட்டி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு : ஜெ. கல்யாண்,இசை : கவின்-ஆதித்யா, படத்தொகுப்பு : எஸ்.மணிக்குமரன், மக்கள் தொடர்பு : கே.எஸ்.கே. செல்வா.
“மனிதர்களை தங்களுக்கு ஏற்றபடி திறமையாக கையாளுதல்” அதாவது மேனிபுலேஷன் இதுவரை யாரும் சொல்லாத புதிய கதைகளம் வைத்து இப்படம் உருவாகியுள்ளது. மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு சொல்லும் வாழ்க்கை பயிற்சியாளராக நடித்துள்ளார். நாயகன் வி (விஜய் குப்புசாமி).அக்னி (வி).அவரிடம் தன் தோழியின் மணவாழ்க்கை சிக்கலில்; இருப்பதாகும் அதற்கு ஆலோசனை வழங்குமாறு ஐகிரி (அனிகா விக்ரமன்) அணுகிறார். அக்னியும் தம்பதிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கி சேர்த்து வைக்கிறார். இதனால் அக்னியும் ஐகிரியும் அடிக்கடி சந்திக்க நேரிட காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்திற்கு முன் அக்னி தனக்கு தரங்கிணி(சைத்ரா ரெட்டி) என்ற காதலி இருந்ததாகவும் கூறுகிறார்(கதையை பார்ப்போம் )
நாயகன் வி (விஜய் குப்புசாமி), நாயகி சைத்ரா ரெட்டி இருவரும் காதலிக்கின்றனர். நாயகி வெளிநாடு சென்று படிக்க தன் வாழ்க்கை வளர்ச்சியடைய நினைக்கிறாள். ஆனால், நாயகன் தன்னுடன் இருந்து தன்னுடைய தொழில் வளர்ச்சிக்காக, தன்னுடனேயே இருக்குமாறு கூறுகிறார் அவளுடை.ய வெளி நாடு பயண சிக்கல் முடிகிறது இதனால் கருத்து வேறுபாடு காரணமாகிறது பிரிகின்றனர்.
எதிர்பாராதவிதமாக ஒரு நாள் ஒட்டலில் முன்னாள் காதலி தரங்கிணியை பார்க்கிறார் அக்னி சந்திக்க நேர்ந்தது , இதை மறைந்துயிருது ஐகிரி கவனித்து விடுகிறாள் இதனால் ஐகிரிக்கு அக்னி மேல் சந்தேகம் தீ எழ, இவர்களை கண்காணிக்க அலுவலகத்தில், வீட்டில், காரில் மறைமுக கேமிராவை வைக்கிறார் இதனிடையே இருவருக்கும் சிறு பிரச்சனையால் பிரிய நேரிடுகிறது ஒரு கட்டத்தில் ஐகிரியின் மறைமுக கேமிராவைப் பற்றி தெரியவருகிறது , தரங்கிணி அக்னிவிட்டு விலகியிருக்கிறாள் திடீர் அகனி யை சந்தித்து நான் கருவுற்று மாசமாக (கருவுற்றள்) இருக்கிறேன் இறுதியில் சந்தேகம் நிஜமானதை ஐகிரி எப்படி தாங்கி. கொண்டாள் ஐகிரியின் மறைமுக கேமிராவைப் பற்றி தெரிய வருகிறது அக்னி என்ன செய்தார்? அக்னி இருவரில் யாரை தன் வாழ்க்கையில் தேர்ந்தெடுத்தார்?
இந்த மூவரைப் நோக்கி கதை நகர்வுகள் வேறு தளத்திற்க்கு அழைத்து செல்கிறது.
அது என்ன படத்தலைப்பு விஷமக்காரன்?. ஆம், அதுதான் படத்தின் க்ளைமாக்ஸ் டிவிஸ்ட்?அக்னியின் மறுமுகம் என்ன?இப்படி பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் கதைகளம். என்பதே மீதிக்கதை
அக்னியாக வி தன் கதாபாத்திரத்தை உணர்ந்து அறிமுகப் படத்திலேயே பேச்சாற்றல் கையாண்டு தமிழ், ஆங்கிலம் என்று கலந்து பேசி சில நேரங்களில் நாம் பார்பது தமிழ் படம் தானா ? சந்தேகம் இருந்தது அந்த அளவு ஆங்கில வார்த்தை பயன்படுத்தி இருந்தது அவருக்கு சரியான கதாபாத்திரம்
இவருக்கு உறுதுணையாக அனிகா விக்ரமன் சந்தேகபுத்தி கொண்ட மனைவி ஐகிரியாகவும், சைத்ரா ரெட்டி அழகு, காதலி தரங்கிணியாகவும் படம் முழுவதும் வந்து தங்கள் கதா பாத்திரங்கள் சரியாகவும் நேர்த்தியாகவும் இருந்தது இந்த மூன்று பேரை சுற்றியே கதை நகர்வதால், மற்ற கதாபாத்திரங்களும் தேவைப்படாமல் போகிறது.
நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
இரட்டை இசையமைப்பாளர்களின் இசையில் பாடலும், பின்னணி இசையும் இனிமை.
ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் இப்படத்திற்க்கு பக்கபலம்.
இயக்குனர் புது முயற்ச்சிக்கு பாராட்டு
மொத்தத்தில் ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் “விஷமக்காரன்” ரசிகர்களுக்கு நல்ல பொழுதுப் போக்குக்கான விபரமான ஆட்டகாரன் .