“உழைக்கும் கைகள்* திரைப்படத்தின் விமர்சனம்

கே. எம்பையர் மூவீஸ் சார்பில் டாக்டர் மு. சூர்யாகுமரகுருபரன் தயாரித்து திரைக்கதை, வசனம் எமுதி இயக்கியிருக்கிறார் நாமக்கல் எம்.ஜி.ஆர்.
இதில் நாமக்கல் எம்.ஜி.ஆர்., செந்தில்நாதன்,கிரண்மை,ஜாகுவார் தங்கம்,பிரேம்நாத், மோகன்,போண்டாமணி, ஷர்மிளா, விஜயலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை-சங்கர்கணேஷ், சண்டை பயிற்சி ; ஜாகுவார் தங்கம், விஜய் ஜாகுவார், கேமரா- சிவா, படத்தொகுப்பு- எஸ்.ஜே..பாரதி, தயாரிப்பு மேற்பார்வை- செங்கோட்டை கணேஷ்,தயாரிப்பு வடிவமைப்பு- சதாசிவ மூர்த்தி, டைரக்சன் மேற்பார்வை – செந்தில்நாதன், மக்கள்; தொடர்பு- விஜயமுரளி,கிளாமர் சத்யா.

கிராமத்தின் பெரிய பணக்கார பண்ணையாரின் மகனாக முத்தையா இருந்தும் விவசாயத்தில் முழு ஈடுபாடு கொண்டு ஏழை மக்களுக்கு உதவும் நல்லெண்ணம் கொண்டவராக விளங்குகிறார். இந்த நல்ல மனசுகாரரை நாயகி ககாதலிக்கிறார் .அவளோ பக்கத்து ஊர் பண்னையாரின்  மனைவியின் தங்கை இவளை வேலுபாண்டியன் திருமணம் செய்ய துடிக்கிறார் . முத்தையா தந்தையோ விவசாயி தொழிலாளிகளை ஏமாற்றி வயிற்றில் அடிப்பது தன் கொள்கையாக வைத்து உள்ளார். விவசாயி மக்களிடம்  அநியாய அதிக வட்டிக்கு பணம் வாங்குவதும் அவா்களை  மிரட்டுவதுதைப் பார்த்து முத்தையாவிற்கும், அப்பாவின் நடவடிக்கை சுத்தமாக பிடிக்கவில்லை  இதனால் வீட்டில் அப்பா மகனுக்கு  அடிக்கடி பிரச்சனை ஏற்படுகிறது . அதே சமயம்  பக்கத்து ஊர் பண்ணையார் வேலுபாண்டியன் ஏழை விவசாயிகளின் நிலங்களை மிரட்டி வாங்கி தொழிற்சாலை கட்ட முடிவெடுக்கிறார் , தொழிற்சாலை கட்ட பணிகள் நடக்கிறது இந்த விஷியம் முத்தையாவிற்க்கு தெரிய வருகிறது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

வேலுபாண்டியன் முத்தையாவை தீர்த்துக் கட்ட முடிவெடுக்கிறார். இந்த சதியிலிருந்து முத்தையா தப்பித்தாரா? முத்தையாவின் தந்தை திருந்தினாரா? காதலியை கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் கதை.

இதில் நாமக்கல் எம்.ஜி.ஆர்., செந்தில்நாதன், கிரண்மை, ஜாகுவார் தங்கம், பிரேம்நாத், மோகன், போண்டாமணி, ஷர்மிளா, விஜயலட்சுமி மற்றும் பலர் கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

நல்ல நல்ல நிலம் பார்த்து,இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள,காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது, கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி .. விவசாயி. என்ற பாடல்களை ரீமேக் செய்து பழைய பாடல்களின் தன்மை மாறாமல் இன்றைக்கும் ரசித்து கேட்கும் வண்ணம் இசையமைத்துள்ளார் சங்கர்கணேஷ்.

சண்டை பயிற்சி ; ஜாகுவார் தங்கம், விஜய் ஜாகுவார், கேமரா- சிவா, படத்தொகுப்பு- எஸ்.ஜே..பாரதி அனைவருமே படத்திற்கேற்ற பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.

1967 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் விவசாயி. இதில் கே.ஆர்.விஜயா, வி.கே.ராமசாமி, நாகேஷ், மனோரமா ஆகியோர் நடித்திருந்த படத்தின் ரீமேக் தான் நாமக்கல் எம்ஜிஆர் நடித்து.திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் உழைக்கும் கைகள். படத்தின் கதாபாத்திரங்கள் பெயர்கள், சம்பவங்கள், பாடல்கள் அத்தனையும் அப்படியே தக்கவைத்துள்ளார் .

அன்றைய ,இன்றைய காலம் தொட்டு விவசாயி பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கிறது சரியான காலகட்டம் சரியான நேரத்துக்கு வந்துள்ள படம்  விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ள படம் இப்படம் தன்னால் முடிந்தவரை எம்.ஜி.ஆர் போல்நடை,உடை,பாவனையோடு சிறப்பாக கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குனர் நாமக்கல் எம்.ஜி.ஆர்.பாராட்டு

இதில் நடித்த  நடிகர், நடிகை. நாயகி  அனைவரும் சரியான தேர்வு வாழ்த்துக்கள். இப்படத்தில் பணியாற்றி தொழிநுட்ப கலைஞர்கள் பாராட்டு

இப்படத்தின் பல குறைகள் இருந்தாலும் எம் ஜி ஆரை நம்  மனதில் நினைத்து நிலைத்து இருப்பதால் குறை தெரியாது. எம்.ஜி.ஆர் , ரசிகர்களுக்கு நினைவூட்டல்   படமாகவும், மக்களுக்கு பிடித்த படமாகவும் இருக்கும்.

“உழைக்கும் கைகள்” விவசாயின் கைகள் உலகிற்கு உயர்த்தி காட்டியுள்ளார் .