யஷ் படத்தின் அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்

யஷ் படத்தின் அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த 13-ம் தேதி வெளியான படம் ‘கேஜிஎப்-2’. இதில் சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரசிகர்களின் மாபெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் பல முன்னணி ரசிகர்களின் படங்களை பின்னுக்கு தள்ளி வசூல் ரீதியாக சாதனை படைத்தது. மேலும், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பிய நிலையில், அமேசான் பிரைமில் ‘கேஜிஎப் 2’ படத்தை காண ரூ.199 தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது ஜூன் 3-ஆம் தேதி அமேசான் பிரைமில் ஐந்து மொழிகளில் ‘கேஜிஎப் 2’ வெளியாகவுள்ளது. இப்படத்தினை அமேசான் சந்தாதாரர்கள் இலவசமாக காணலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கேஜிஎப் 2’ படத்தின் டீசரை படக்குழு நேற்று வெளியிட்டு ரசிகர்களை கவந்துள்ளது.