மாவட்ட அளவில் கூடைப்பந்து போட்டியில் முகப்பேர் பள்ளி மாணவிகள் சாதனை!

மாவட்ட அளவில் கூடைப்பந்து போட்டியில் முகப்பேர் பள்ளி மாணவிகள் சாதனை!
திருவள்ளூர் மாவட்ட கூடைப்பந்து கழகம்
மாவட்ட அளவில்
போட்டியை ஏற்பாடு
செய்திருந்து.இப் போட்டியில் திருவள்ளூர் மாவட்டப் பள்ளிகளைச் சார்ந்த 6 அணிகள் பங்கேற்றன. இப்போட்டியானது மே 26 முதல் 28 வரை மதனன் குப்பத்தில் நடைபெற்றது. இதில் 14 வயதிற்கு உட்பட்ட பெண்கள்
பிரிவில் முகப்பேரில்
அமைந்துள்ள வேலம்மாள் முதன்மைப் பள்ளியில் பயிலும்
கூடைப்பந்து அணியின் மாணவிகள்
பங்கேற்று வெற்றி
பெற்று சான்றிதழ்கள் மற்றும் வெள்ளிப்
பதக்கங்களைப் பெற்று, மாவட்டங்களுக்கு இடையே நடைபெறும் போட்டிக்கு மேலும் தகுதி பெற்றது.
சிறப்பான சாதனைப் படைத்த அணியைப் பள்ளி நிர்வாகம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தது.