வாட்ச்’ விமர்சனம் : ‘வாட்ச்’ திரில்லர் பட ரசிகர்கள் பார்க்கலாம் !
விஏ ஸ்டுடியோஸ் பேனரில் நாவலன் வீரபாண்டியன் தயாரிக்கும் படம் வாட்ச். கிரிஷ் எஸ் குமார், சப்ரீனா ஆலம் மற்றும் மேத்யூ வர்கீஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை அமைப்பாளர்கள் சுகன்யன் சுந்தரேஸ்வரன் – எட்வின் லூயிஸ் பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைத்துள்ளனர். முகமது அமீன், இனியா கதிரவன், கலைச்செல்வன், சுதிர் – விஜய் அசோகன் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்ய, விஜய் அசோகன் – ராஜா ராம் படத்தொகுப்பு செய்துள்ளனர். விஜய் அசோகன் எழுதி இயக்கியுள்ளார்.
கார்டூனிஸ்ட் கலைஞராக இருக்கும் நாயகன் கிரிஷ் ஒரு பத்திரிக்கையாளர் மூலம் மருத்துவத்துறையில் நடக்கும் மிகப்பெரிய மருந்து மோசடி பற்றிய தகவல் மற்றும், அதில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான ஆதரங்களும் கிடைக்கிறது. அந்த ஆதாரங்களை வைத்து அந்த மோசடி கும்பலை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதன் விளைவு வில்லன்களிடம் சிக்கி கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி மூன்றுஆண்டுகள் சுயநினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைக்கிறார். இருந்தாலும், தலையில் அடிபட்டதால் வினோத நோய்க்கு ஆளாகிறார். ஆதன்பின் அவருக்கு என்ன ஆகிறது? மருத்துவ ஊழல் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதை படத்தின் மீதிக்கதை.
நாயகன் கிரிஷ் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு கதையை உள்வாங்கி கொடுக்கப்பட்ட கேரக்டரை அசத்தலான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்.
நாயகி சப்ரினா ஆலமுக்கு குறைவான காட்சிகள் என்றாலும் அப்ளாஸ் அள்ளுகிறார்.
வில்லன்கள் மேத்யூ வர்கீஸ், உதயகுமார் மற்றும் ஹீரோவின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் திறம்பட நடித்துள்ளனர்.
முகமது அமீன், விக்னேஷ் வாசு, இனியகதிரவன், கலைச்செல்வன் ஆகிய நான்கு பேர் ஒளிப்பதிவுவாளர்களின் பங்களிப்பு கதையோட்டத்தை போரடிக்காமல் நகர்த்த உதவுகின்றனர்.
சுகன்யன் சுந்தரேஸ்வரன் இசையில் பாடல்கள் சுமார் பின்னணி இசை ஓகே.
மிகப்பெரிய சமுதாயச்சிக்கலை மையமாகக் கொண்ட கதையில் கதாநாயகனுக்கு ஒரு புதுவகை நோயைக் புகுத்தி, ஒரு சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக இயக்கியிருக்கிறார் விஜய் அசோகன். வித்தியாசமான அவரது முயற்சி பாராட்டத்தக்கது.
மொத்தத்தில், ‘வாட்ச்’ திரில்லர் பட ரசிகர்கள் பார்க்கலாம்.