திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் நடக்கும் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயல்கள்!
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் திரு.பாலக்கிருஷ்ணன், இவர் தனது எஸ்.ஐ- ஆக நாகேந்திரன் என்பவரை நியமித்துள்ளார் இந்த நாகேந்திரன் கடந்த மூன்று ஆண்டுகளாக வேலூர் மாவட்டத்தில் கொலோச்சியவர் அனைத்து விதமான சட்ட விரோத செயல்கள் புரியும் நபர்களிடம் லஞ்சம் பெற்று எதைப்பற்றியும் கண்டுக் கொள்ளாமல் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் தேவையான சிலவுகளை கவனிப்பார், தற்போது இந்த நாகேந்திரன் மற்றும் திருப்பத்தூர் வாணியம்பாடி காவல் ஆய்வாளர் நாகராஜ் இருவரும் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் லாட்டரி, காட்டன், கேம்பிளிங் என சட்ட விரோதமான செயல்களுக்கு அனுமதி கொடுத்து லஞ்சம் பெறுகின்றனர் இவர்களுக்கு துணையாக இருப்பவர் கியூ பிரான்ச் எஸ்.ஐ கமலக்கண்ணன்,
இவை அனைத்தும் மாவட்ட கண்காணிப்பாளராக உள்ள பாலக்கிரிஷ்ணனுக்கும் தெரியும், இவர்களை பற்றிய முழு தகவல் சேகரிக்க முருகனின் ஆயுதத்தின் பெயர் கொண்ட ஒரு உளவுத்துறை ஆய்வாளர் நியமிக்கப்பட்டார் அதனை அறிந்த எஸ்.பி. மாதம் இருமுறை வேலூர் ஐடிசி வருவதை நிறுத்தியுள்ளார் எஸ்.பி யின் நிழலாக உள்ள நாகேந்திரன் 2008 பேட்ச் சேர்ந்தவர் அவருக்கு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வந்து சென்னைக்கு போஸ்டிங் செய்யப்பட்டும் இன்று வரை திருப்பத்தூர் எஸ்.பி அவரை அனுப்பாமல் தனது வசூல் தளபதியாக நாகேந்திரனை பயன்படுத்தி கொண்டுள்ளார் என்பது திருப்பத்தூர் காவல்துறையினரின் குமுறல்.
மேலும் இந்த நாகேந்திரன் நேர்மையாக பணிபுரியும் உயர் அதிகாரிகள் பற்றி மொட்டை பெட்டிஷன் தயாரிப்பது, ரவுடி எலமென்ட்ஸ் ஓடு இணைந்து நேர்மையாக பணிபுரிபவர்களை பணியிடம் மாற்றம் செய்ய காவல் கண்காணிப்பாளரிடம் சில உள்ளடி வேலைகள் செய்வது என பல அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடும் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
இவர் தன்னை உளவுத்துறை உயர் அதிகாரிகளுக்கு நெருக்கமானவராகவும் வெளியில் பிம்பம் ஏற்படுத்தியுள்ளார்