தமிழ்நாட்டில் தனது இரண்டாவது விற்பனை நிலையத்தை திறந்த சாய் சுத்தா பார் நிறுவனம்

தமிழ்நாட்டில் தனது இரண்டாவது விற்பனை நிலையத்தை திறந்த சாய் சுத்தா பார் நிறுவனம்
சிஎஸ்பி தற்போது உலகம் முழுவதும் 175க்கும் மேற்பட்ட நகரங்களில் 375க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது, 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சிஎஸ்பி 1500க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களைத் திறக்க இலக்கு வைத்துள்ளது.

சென்னை, ஜூலை 28 2022: இந்தியாவின் சிறந்த தேநீர் விற்பனை பிராண்டான சிஎஸ்பி (சாய் சுத்தா பார்) தமிழ்நாட்டில் தனது இரண்டாவது விற்பனை நிலையத்தை சோழிங்கநல்லூரில் திறந்துள்ளது. திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் திரு. வெங்கடேஷ் ஐயர் கலந்து கொண்டார், சாய் சுத்தா பார் ஊழியர்கள், நிர்வாகிகள் மற்றும் பலர் புதிய விற்பனை நிலைய திறப்பு விழாவில் கலந்துகொண்டனர். அதிக எண்ணிக்கையிலான இளம் தொழில் வல்லுனர்களை ஈர்க்கும் வகையில் இந்த விற்பனை நிலையம் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களுக்கு அருகில் அமைந்துள்ளது. புதிதாக திறக்கப்பட்டுள்ள சிஎஸ்பியின் இந்த விற்பனை நிலையம் அனைத்து இளைஞர்கள், குடும்பங்கள், மாணவர்கள் அனைவருக்கும் பல்வேறு சுவைகளில் தேநீரை அனுபவிக்கும் அனுபவத்தை வழங்கும்.

தேநீர் இந்தியாவில் வெகுஜன மக்களின் விருப்பமான பானங்களில் ஒன்றாகும். சிஎஸ்பி தேநீர் விரும்பிகளுக்கு பல்வேறு வகையான தேநீர்களை மண் குவளைகளில் வழங்கி அவர்களது தேநீர் தருணத்தை சுவை மிகுந்ததாகவும் இனிமையாகவும் மாற்றுகிறது. சிஎஸ்பி ஒவ்வொரு நாளும் 4.5 இலட்சம் மண் குவளைகளில் தேநீர் வழங்கி வருகிறது.

திறப்பு நிகழ்வில் கலந்து கொண்ட பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் திரு. வெங்கடேஷ் ஐயர் கூறுகையில், தமிழ் நாட்டில் சிஎஸ்பியின் இரண்டாவது விற்பனை மையத்தை திறந்து வைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விற்பனை நிலையத்தின் தனித்துவத்தை என்னால் பார்க்கவும் உணரவும் முடிகிறது. நீங்கள் சிஎஸ்பியில் தேநீர் குடிக்கும் போது ஒவ்வொரு வகையான சுவைக்கும் இங்கு ஒவ்வொரு வகையான தேநீர் கிடைக்கப்பெறுகிறது. எனக்கு இதில் பிடித்தது சாக்லேட் தேநீர் ஆகும் என்று கூறினார்.

சிஎஸ்பியின் விற்பனை நிலையங்களில், ஆதரவற்றவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதன் மூலம் அவர்களது வாழ்வு சிறக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. மேலும் சாய் சுத்தா பார் என்ற பெயர் புகைத்தல், மது அருந்துதல் போன்ற விஷயங்களை ஊக்குவிக்க அல்லாமல் தேநீர் அருந்தும் அனுபவத்தை அளிப்பதற்காக பெயரிடப்பட்டுள்ளது.

“தமிழகத்தில் எங்களின் இரண்டாவது விற்பனை நிலையத்தைத் திறப்பதை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். சென்னையில் எங்களுக்குக் கிடைத்த அன்பு எங்களை மிகவும் திக்குமுக்காடச் செய்துள்ளது. இந்த புதிய விற்பனை நிலையம் தேநீர் விரும்பிகளுக்கும் தேநீருக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்புகிறது. புதிய தேநீர் சுவைகள் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் இன்னும் பலவற்றை வழங்குகிறோம் என்று சாய் சுத்தா பார் இணை நிறுவனர் அனுபவ் துபே கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியின் ஒரு பகுதியாக, எங்கள் நிறுவனக் குழு தேநீர் வழங்கப்பட வேண்டிய இடம் மற்றும் இலக்குப் பகுதியில் ஆய்வு செய்தது. வாடிக்கையாளர்களுக்கு வசதியான இருக்கைகள் சாத்தியக்கூறு குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர், எனவே தேநீர் விரும்பிகள் தேநீரை முழுமையாக அனுபவிக்கும் வகையில் இந்த தேநீர் விற்பனை நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், சிஎஸ்பியின் குழு அந்த இடத்தில் வாகன நிறுத்துமிடங்களிலும் கவனம் செலுத்தியுள்ளது, இதனால் பார்வையாளர்களும் வாடிக்கையாளர்களும் எளிதாக தங்கள் வாகனங்களை வாகனங்களை நிறுத்தி தேநீர் அருந்தலாம் மற்றும் மகிழலாம். மண் குவளை தேநீர் சுவையை உலகம் முழுவதும் பரப்புவதையும், எங்கள் “தேஷ் கி மிட்டி” குறிக்கோள் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம் என்று கூறினார்.

சிஎஸ்பி பற்றி:

சாய் சுத்தா பார் பிரைவேட் லிமிடெட் (CSB) என்பது அனுபவ் துபே மற்றும் ஆனந்த் நாயக் ஆகியோரால் 2016 இல் நிறுவப்பட்ட இந்தூரை தளமாகக் கொண்ட தேநீர் மற்றும் பானங்கள் வழங்கும் நிறுவனமாகும். சிஎஸ்பி இந்தியாவில் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிக அளவு உட்கொள்ளும் பானமான தேநீரை வழங்கும் யோசனையுடன் தொடங்கப்பட்டது. சிஎஸ்பியின் விற்பனை நிலையங்களில், பல்வேறு வகையான தேநீரும் பல வகையான உணவு வகைகளும் கிடைக்கின்றன. சிஎஸ்பி இளைஞர்கள் சிறிது நேரம் செலவழிக்க சரியான சூழலை வழங்கும் நம்பகமான பானப் புள்ளியாக விளங்குகிறது, சிஎஸ்பி ஒவ்வொரு நாளும் 4.5 இலட்சம் மண் குவளை தேநீர் வழங்குகிறது.

இணையதளம்: https://chaisuttabarindia.com/