பேட்டரி
(திரை விமர்சனம் )
கதை :
இதய நோயாளிகளுக்கு வைக்கப்படும் face makker கருவிகளில் உபயோகப்படுத்தும் பாட்டெரியில் ஏற்கனவே உபயோகப் படுத்தப்பட்ட இரண்டாம் நிலை பேட்டரிகளை மருத்துவர்கள் வியாபார நோக்கில் நோயாளிகளுக்கு வைக்கின்றனர் அதில் நமது நாட்டில் அப்பாவி மக்கள் இறக்கின்றனர் கதாநாயகன் செங்குட்டுவனின் சிறுவயது தங்கையும் இந்த குறைபாட்டினால் இறக்கிறாள் இதனை அறிந்த நாயகன் செங்குட்டுவன் அந்த கும்பலை எப்படி கன்டுபிடித்து அழிக்கிறார் என்பதே கதை !
முற்றிலும் புதுமையான கதைக்கருவுடன் களம் இறங்கிய இயக்குனர் மணிபாரதி வெற்றிப்பெற்றிக்கிறார் புதுமுகம் என்று நம்ப முடியா வண்ணம் நாயகன் செங்குட்டுவனின் நடிப்பு அற்புதம் நாயகி அம்மு அபிராமி சில காட்சிகளில் வந்தாலும் மனதில் பதிகிறார் சஸ்பென்ஸ் திரில்லிங்குடன் கதையை இயக்குனர் மணிபாரதி வெகு லாவகமாக நகர்த்தி சென்று நம்மை வியக்க வைக்கிறார் ms பாஸ்கரின் கண்ணீர் நடிப்பு நம்மை அழ வைக்கிறது ! இசையமைப்பாளர் சித்தார்த் விபின் மிக அழகாக காட்சிகளுக்கு தரமான பின்னணி இசையால் ஜீவன் தந்துள்ளார் gk வெங்கடேஷ் அவர்களின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலத்தை வழங்கியுள்ளது மொத்தத்தில் இந்த பேட்டரி தரமான கருத்துடன் பொதுமக்கள் இதய நோயில் பாதிக்கப்படும் போது face makker வைட்டப்படுவதற்கான எச்சரிக்கையை வழங்கும் தரமான மருத்துவ படமாக வெளிவந்துள்ளது அனைவரும் குடும்பத்துடன் காண வேண்டிய படம் பேட்டரி
அன்புடன்
விக்ராந்த் பிரபாகரன் ✍✍✍✍✍✍✍✍