ரசிகர்களும் பக்தி பரவசம் அடைவது உறுதி என்கிறார் இயக்குனர் ப்ரியா பாலு!

ரசிகர்களும் பக்தி பரவசம் அடைவது உறுதி என்கிறார் இயக்குனர் ப்ரியா பாலு!

பி.ஜி.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில், ப்ரியா பாலு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாரித்து வரும் படம் “சீரடி சாய்பாபா மகிமை”

ரவிக்குமார் சாய் பாபா’வாக தோன்றுகிறார். இயக்குனர் ப்ரியா பாலுவுடன் சீரடி சென்று பாபாவை வணங்கி வந்த நடிகர் ரவிக்குமார் விரதம் கடைப்பிடித்து, நடிக்கிறார்.

நூறாண்டுகளுக்கு முன் சாய்பாபா மனித உருவில் வாழ்ந்த காலத்தில், அவர் நிகழ்த்திய அற்புதங்கள் இந்தப் படத்தில் தத்ரூபமாக, அவர் நடமாடிய இடங்களிலேயே எடுக்கப்படுகிறது.

ஹரிகாந்த் ஒளிப்பதிவு செய்கிறார். அபிஜோஜோ இசையில், பத்து பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. கவிஞர் எம்.எஸ்.மதுக்குமார் பக்தி வரிகளில், பிரபல பாடகர் எஸ்‌.என்.சுரேந்தர் தேன் குரலில் “படி படியாய் படிக்கவா, பக்தி கதை பாடவா”… என்ற பாடல் ஒலிப்பதிவின் போது, பக்தி பரவசத்தில் படக்குழுவினர் மகிழ்ந்தனர். படம் திரைக்கு வரும் போது ரசிகர்களும் பக்தி பரவசம் அடைவது உறுதி என்கிறார் இயக்குனர் ப்ரியா பாலு.

PRO_கோவிந்தராஜ்