மாணவர்கள் தங்களின் தனிப்பட்ட வளர்ச்சியிலும் சமூக பங்களிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என மாணவர்களை உத்வேகமூட்டினார் அக்சென்சர் நிறுவனத்தின் மனித வளப் பிரிவுத் தலைவர் சாம் ஜப சிங்.
மாணவர்கள் தங்களின் தனிப்பட்ட வளர்ச்சியிலும் சமூக பங்களிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என மாணவர்களை உத்வேகமூட்டினார் அக்சென்சர் நிறுவனத்தின் மனித வளப் பிரிவுத் தலைவர் சாம் ஜபா சிங்.
எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வளாக நேர்காணல் நிகழ்வு 5.08.2022 அன்று மிகச் சிறப்பாக கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 87 தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்றன. 616 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அக்சென்சர் தொழில்நுட்ப நிறுவனத்தின் இந்தியாவின் மனித வளப்பிரிவின் தலைவர்
திரு.சாம் ஜெபாசிங் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி ஊக்க உரை நிகழ்த்தினார்.
இவர் தனது உரையில் மாணவர்கள் அனைவரும் தங்களின் தனிப்பட்ட வளர்ச்சியிலும் மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் தங்களின் பங்களிப்பை அவசியம் அளிக்க வேண்டும் எனவும் வாழ்க்கையின் அடுத்த மைல்கல்லான தொழில்நுட்ப பணிகளை மேற்கொள்ள அடி எடுத்து வைக்கப் போகும் தாங்கள் பொறுப்புகளை உணர்ந்து கவனமுடன் செயலாற்ற வேண்டும் எனவும், பணிநியமன ஆணைகளைப் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டு, பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சிறப்பாக செயல்படும் கல்லூரியின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையைப் பாராட்டியும், மாணவர்களை ஊக்குவித்தும் சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்நிகழ்வில் எஸ் ஆர் எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் தாளாளர் ஹரிணி ரவி பச்சமுத்து அவர்கள் கலந்துகொண்டு பணிநியமன ஆணைகளை வழங்கியும், பணிநியமன ஆணைகளைப் பெற்ற மாணவர்களை வாழ்த்தியும் தலைமையுரை நிகழ்த்தினார். இவர் தனது உரையில் மாணவர்கள் தங்களின் கடின உழைப்பை செயல்படுத்தினால் நிச்சயமாக வியத்தகு வெற்றிகளைப் பெற முடியும் எனவும், வேலைவாய்ப்பு துறையின் மூலம் பணி நியமனம் பெற்ற வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் கல்லூரி இயக்குநர் முனைவர் பா. சிதம்பரராஜன் அவர்கள் தனது உரையில், மாணவர்கள் எந்த நிறுவனத்தில் சேர்ந்து தங்களின் திறமைகளை வெளிப்படுத்த முடியும் என்ற வகையில் அலசி ஆராய்ந்து பல தொழில்நுட்ப நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு, மாணவர்களை தொழில்நுட்ப நிறுவனத்திற்குள் பணிக்கு அமர்த்தும் சிறந்த பணியை மேற் கொண்டு வரும் வேலை வாய்ப்புத் துறைக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டு, பணி நியமன ஆணையைப் பெற்ற மாணவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் எஸ் ஆர் எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ம.முருகன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
கல்லூரியின் வேலைவாய்ப்பு துறையின் மூலம் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி வாய்ப்பு கிடைக்கப் பெற்ற மாணவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
பணி நியமன ஆணைகளைப் பெற்ற மாணவர்களில் அதிகபட்சமாக வருடத்திற்கு 8 லட்சத்து 40 ஆயிரம் சம்பளமும் குறைந்தபட்சமாக மூன்று லட்சத்து 50 ஆயிரம் சம்பளமாக பணி நியமன ஆணைப் பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்வில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைத்தலைவர் மோனிகாபால் வேலைவாய்ப்புத் தொடர்பான அறிக்கையை வாசித்தார்.
*****