சென்னை – செங்கல்பட்டு – திருவள்ளூர் – காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில், முத்தமிழறிஞரின் 4-ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம், அரிமா சங்கம் கோல்டு, அப்பல்லோ மருத்துவமனை, மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் தமிழகத்தின் முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உறுப்பினர்களுக்காகவும், அவர்களின் குடும்பத்தினருக்காகவும் நடைபெற்ற மருத்துவ முகாமை திரைப்பட நடிகரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் துவக்கிவைத்து பேசினார்.
இந்த விழாவில் அறநிலையதுறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் வீட்டுவசதி வாரிய தலைவரும், நடிகர் சங்கத்தின் துணை தலைவருமான பூச்சி முருகன் , வேல்ஸ் பல்கலைகழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ், கவுன்சிலர்கள் சிற்றரசு, மதன்மோகன், சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், பிரபு@ராம்பிரசாத், பன்னீர்செல்வம், நானி செல்வம், தியாகு, சொக்கலிங்கம், ஆகியோரும் கலந்துகொண்டனர்.
சங்கத்தின் தலைவர் கே.ராஜன் தலைமை வகிக்க, பொருளாளர் பி.முரளி, துணைத்தலைவர் நந்தகோபால்,
இணைச்செயலாளர் சாய் என்கிற சாய்பாபா மூவரும் முன்னிலை வகிக்க. செயலாளர் காளியப்பன் நன்றி கூறினார்.
300க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ முகாமில் சிகிச்சை எடுத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.